பாராளுமன்ற தேர்தலுக்கான பயணத்திலேயே நாம் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியில் இணைந்தோம். கட்சியும் புதிய கட்சி ஆனால் இன்று நாம் பலமான பழமையான ஆளும் எதிர் கட்சிகளுடன் சவால் மிக்க நிலையில் உள்ளோம். என ஐக்கிய ஜனநாயக கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் முதன்மை வேட்பாளருமான ஆப்தீன் எஹியா தெரிவித்தார்.
நேற்று (03) வர்த்தகர் நஸ்லீம் அவர்களின் தலைமையில் மதவாக்குளத்தில் இடம்பெற்ற முதலாவது பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் உறையாற்றுகையில்,
இறைவனின் ஏற்பாடாகவும் எனக்கான சிறந்த பாதையை காட்டுவதாகவும் உணர்கிறேன். என்னுடைய ஆரம்பகால அரசியலில் போராளியாக இருந்தவர்கள் எம்மோடு இணைந்துள்ளனர். இன்னும் முன்னால் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் எம்மோடு இணைகின்றனர்.இன்னும் இணைய ஆவலாக உள்ளதையும் பார்க்கின்றோம்.
ஊழலற்ற தலைமைத்துவமும் இனவாதமற்ற கொள்கையையுமே மக்கள் அலையலையாக எம்மோடு இணைய காரணமாகவும் உள்ளது. அத்தோடு மதவாக்குளம் மக்களின் ஒற்றுமையையும் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை தெரிவு செய்வதிலும் தகுதியான தலைமைத்துவத்தை உருவாக்குவதிலும் மதவாக்குளம் மக்களின் முன்மாதிரியை தான் மதிப்பதாகவும் கூறினார்.
இந்நிகழ்வில் ஐக்கிய ஜனநாயக குரலில் கட்சியின் வேட்பாளர் ஜெசீல்,மற்றும் மதவாக்குளம் பள்ளி தலைவர் மற்றும் பலர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment