மக்களுக்கு நிம்மதி இல்லை என்றால் கட்சிகளும், தலைமைகளும் எதற்கு : வேட்பாளர் சபீஸ் காட்டம்



மாளிகைக்காடு செய்தியாளர்-
நிவாரணம் கொடுப்பதன் மூலம் மக்களை நிம்மதியாக வாழ வைக்க முடியாது. இளைஞர்களை சொந்த முயற்சியின் மூலம் தொழில் வழங்குனர்களாக மாற்றினால் மாத்திரமே மக்கள் நிம்மதியாக வாழ்வர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னம் 10ம் இலக்கத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எம்.சபீஸ் தெரிவித்தார்.

சம்மாந்துறையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,

கடந்த வருடம் இஸ்மாயில் புரத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக போயிருந்தேன் அவ்வேளையில் அதிபரிடம் உங்கள் கணித பாட ஆசிரியர் யார் என்று கேட்டேன் தசாப்தங்களுக்கு மேல் கணித பாட ஆசிரியர் இந்த பாடசாலைக்கு இல்லை என்று சொன்னார்

இதைவிட கேவலம் என்ன இருக்க முடியும். அதிகாரிகளை தொடர்பு கொண்டு உங்கள் பிள்ளைகள் நல்ல முறையில் படியாது என்று சொன்னேன். தன் நிர்வாகத்தின் கீழ் உள்ள பாடசாலையில் கணித பாட ஆசிரியர் இல்லையென்றால் அந்த பிள்ளைகள் எவ்வாறு வாழ்வில் முன்னேறுவார்கள் என்று கேட்டேன்

என்னைப் பொறுத்தமட்டில் 20 வயதுக்குள் தகுதி உடைய அனைத்துக் குழந்தைகளும் பட்டப்படிப்பை நிறைவு செய்பவர்களாக மாறினால் மாத்திரம் மக்கள் நிம்மதியாக வாழும் முறைமையை தோற்றுவிக்கலாம் எனக் கூறினார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :