வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக சுகாதார பணியாளர்களும் களத்தில் !



நூருல் ஹுதா உமர்-
சாய்ந்தமருது வெள்ள அனர்த்தத்தினால் வீடுகள் பாதிக்கப்பட்டு பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸதீன் தலைமையில் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம். மாஹிர் உள்ளிட்ட குழுவினரால் பார்வையிடப்பட்டது

தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சுகாதாரமான உணவு கிடைப்பதையும் அவர்களின் பொதுச்சுகாதாரத்தை உறுதிப்படுத்தி மருத்துவ வசதிகளை செய்து கொடுப்பதற்கும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது பொது சுகாதார பரிசோதகர்களும், பொது சுகாதார மாதுக்களுக்கும் ஆலோசனைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் போசாக்கு உணவுகளை வழங்கி வைப்பது தொடர்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கி வைக்கப்பட்டன

அதனை தொடர்ந்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸதீன் தலைமையில் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம். மாஹிர் உள்ளிட்ட குழுவினரால் மருதமுனை வைத்தியசாலை பார்வையிடப்பட்டதுடன் நடமாடும் மருத்துவ முகாமை உடன் தொடங்குவதற்கும் பதில் பிரதேச வைத்திய அதிகாரிக்கு அறிவுறுத்தல் வழங்கி வைக்கப்பட்டது. மருதமுனை வெள்ள அனர்த்தத்தினால் வைத்தியசாலை வளாகமும் கட்டிடங்களும் பாதிக்கப்பட்ட போதும் உத்தியோகத்தர்களும் உழியர்களும் மருத்துவ உபகரணங்களை பாதுகாப்பாக மீட்டெடுத்தனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :