உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்திய அமைச்சு, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றின் வழிகாட்டலின் கீழ் நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை ஏற்பாடு செய்த உலக நீரிழிவு தினம் - 2024 விசேட நிகழ்வு (22) இடம்பெற்றது.
ஆயுர்வேத / யூனானி வைத்திய வாழ்க்கை முறையூடாக நீரிழிவு நோயற்ற நாட்டை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன், நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் டொக்டர் எம்.ஏ.நபீல், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல். ரைஸ் உள்ளிட்ட வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment