எங்களுக்கே உரித்தான பிரதிநிதித்துவத்தையே நாங்கள் பெற்றுக்கொள்ள முயச்சிக்கின்றோம். எங்களது பிரதிநிதித்துவத்தை பெரும்பான்மையினருக்கு காவுகொடுக்க அவர்களது ஒற்றர்கள் மடித்துக் கட்டிக்கொண்டு களத்தில் உள்ளனர். பசப்பு வார்த்தைகளை பேசித்திரியும் இந்த ஒற்றர்கள் விடயத்தில் மக்கள் தெளிவடைய வேண்டும் என்றும் அமையவுள்ள பாராளுமன்றம் பல்வேறு அரசியலமைப்பு மாற்றங்களை செய்ய முற்படும் என்றும் இவ்வாறான சூழலில் முஸ்லிம் சமூகம் மற்றும் அவர்கள் எதிர்நோக்கியுள்ள காணி உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் சுதந்திரமாக பேசக்கூடியவர்கள் பாராளுமன்றத்தில் அமரவேண்டியது காலத்தின் தேவை என்றும் தெரிவித்தார்.
தனிநபர் வெறுப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை பழிவாங்கும் எண்ணத்தில் நாங்கள் வாக்களிப்போமாகவிருந்தால் எங்களுக்காக சுதந்திரமாக குரல் எழுப்பக்கூடிய பிரதிநிதித்துவங்களை இழந்து உயர்சபையில் குரலற்ற மக்களாகி எங்களுக்கான தனித்துவங்களை இழந்து விடுவோம்.
பெரும்பான்மை கட்சியூடாக எம்மவர்கள் தெரிவு செய்யப்பட வாய்ப்புக்கள் மிக அரிதாகவே உள்ளதாகவும் அவ்வாறு அவர்கள் தெரிவு செய்யப்பட்டாலும் முஸ்லிம்களின் முழுமையான எதிர்பார்ப்புக்களை அவர்களால் நிறைவேற்ற முடியாமல் போய் விடும் என்றும் அவ்வாறான வரலாற்று துரோகத்தை செய்துவிட வேண்டாம் என்றும் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் கிடைக்கவுள்ள பிரதிநிதித்துவங்களில் ஒன்றை அட்டாளைச்சேனை மண் பெறும் என்றும் இங்குள்ள உலமாக்கள், புத்திஜீவிகள், மீனவர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள் என எல்லோரும் ஒன்றிணைந்து உழைப்பதாகவும் அவர்களது எதிர்பார்ப்பு நிறைவேறும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேசம் ஒரு பிரதிநிதித்துவத்தை பெறுவது என்றால் அது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களிப்பதன் ஊடாக மட்டுமே முடியும் என்றும் ஏனைய கட்சிகளின் ஒற்றர்களுக்கோ அல்லது அவர்கள் வழங்கும் சிறு சலுகைகளுக்கோ வாக்களிப்போமாக இருந்தால் பிரதிநிதித்துவத்தை இழந்து தவிக்கவேண்டிவரும் என்றும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் விட்ட தவறுகளை அட்டாளைச்சேனை மக்கள் விடமாட்டார்கள் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
எங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேற்றுமைகளை மறந்து பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள அனைவரும் ஒன்றுபடுமாறும் அறைகூவல் விடுத்தார்.
ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த உதுமாலெப்பை, கல்முனை எங்களது முகவெற்றிலை அதனை பாதுகாக்க நாங்கள் எப்போதும் முன்வருவோம் கடந்த காலங்களிலும் வேறு அணியில் இருந்தபோதும் நாங்கள் கல்முனையை பாதுகாக்க முன்வந்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரச்சனைகளை நாங்கள் தெரிந்து வைத்துள்ளோம். அவைகளை ஏனைய சமூகத்தினருக்கு பாதிப்பை ஏற்படுத்தாத முறையில் தீர்த்து வைக்க பாடுபடுவோம் என்றும் தெரிவித்தார்.
மக்கள் முழுமையாக வாக்களிப்பதனூடாகவே நமது பிரதிநித்துவத்தை தக்கவைக்க முடியும் என்றும் அதற்காக அனைவரும் ஒன்றுபடுமாறும் கேட்டுக்கொண்டார்.
0 comments :
Post a Comment