தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் மேம்பாட்டு நிலையமும் இணைந்து நடாத்திய, ஊழியர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள, கற்கை நெறிகளை பூர்த்திசெய்தவர்களுக்கான சான்றிதழ்வழங்கும் நிகழ்வு, ஊழியர் மேம்பாட்டு நிலைய பணிப்பாளர் கலாநிதி எச்.எம். நிஜாம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் கலந்து உரையாற்றியதுடன் சான்றிதல்களையும் வழங்கி வைத்தார்.
ஊழியர் மேம்பாட்டு நிலையத்தின் திட்ட இணைப்பாளர் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.எச். நபாரின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இரண்டாம் மொழி சிங்கள பாட பயிற்சி நெறியை (100 மணித்தியாளங்கள்) பூர்த்தி செய்த உத்தியோகத்தர்கள் தங்களது இறுதி அடைவை செயல்முறை பயிற்சி மூலம் வெளிப்படுத்தினர்.
இலங்கை தேசிய மொழிகள் கருமபீட வளவாளர்கள் இப்பயிற்சி நெறியினை நாடாத்தி இருந்தனர். அத்துடன் கலை கலாசார மத விழுமியங்களை பறைசாற்றும் வகையில் இறுதிநாள் நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டதுடன் நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பிரதிநிதிகள், கல்வி சாரா ஊழியர்களின் தலைவர் எம்.ரீ.எம். தாஜுதீன் மற்றும் பல்கலைக்கழக சுதந்திர ஊழியர்கள் சங்க தலைவர் சீஎம்ஏ. முனாஸ், காமில், றொஷான், ரம்னாஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழகம் இந்த கற்கை நெறிக்காக சுமார் இரண்டு மில்லியன் ரூபாய்கள் பணத்தை செலவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment