கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் வருடாந்த மீலாதுன் நபி விழா கல்லூரி அதிபர் அருட் சகோதரர் அதிபர் அருட். சகோதரர் S.E.றெஜினோல்ட் FSC தலைமையில் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரியின் 125ஆவது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற மீலாதுன் நபி விழாவானது மிகச் சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்றதை பலரும் பாராட்டினர்.
பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசாரத்துறை தலைவர் பேராசிரியர் எம் .எம். பாசில் கலந்து சிறப்பித்தார் .
கௌரவ அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிமனையின் கணக்காளர் வை.ஹபீபுள்ளா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அதேவேளை பிரதான பேச்சாளராக ஏறாவூர் ஐம்மியத்துல் உம்முல் அறபிக் கல்லூரி அதிபர் ஏஎச்எம்.சாதிக் மௌலானா கலந்து சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். மேலும் பல அதிதிகள் கலந்து கொண்டார்கள்.
மாணவர்களின் கண் கவர் இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகள் களை கட்டின.
பிரதிஅதிபர்கள், உதவிஅதிபர்கள் , பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள் , கல்வி சாரா ஊழியர்கள், மாணவத்தலைவர்கள், மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள்,பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment