கே. உங்களைப் பற்றி
ப.நான் தலை நகருக்கான தொலை நோக்குள்ள சிறந்த சமூக சேவகன், நீதியின் குரல், அசாத் சாலி விருப்பு இல 02 கொழும்பு மாவட்டம் கட்சி புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் சின்னம் கேஸ் சிலிண்டர்
நான் கல்வி கற்ற பாடசாலை கொழும்பு டி.எஸ் சேனாநாயக்க கல்லூரி,வங்கியில் கடமையாற்றினேன், வர்த்தகத்துறையில் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டேன். சமூகத்திற்கு நடக்கும் அநீதிகளுக்கு குரல் கொடுத்தவன் அதற்கு சிறையில் அடைக்கப்பட்டேன். புலனாய்வு ஊடகத்துறையில் தனித்துவத்துடன் செயல்படும் சமூக சீர்திருத்த விவகாரங்களில் முன் நின்று ஒலிக்கும் குரலானது.
கே. உங்களது அரசியல் பயணம்
தற்பொழுது தேசிய ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவர், ஆரம்பம் சமூகப் பார்வையில் பயனாக கொழும்பு மாநகர சபை உறுப்பினராக தெரிவாகி பிரதி மேயராக,மாகாண சபை உறுப்பினர் பின் மேல் மாகாண ஆளுநராகவும் செயல்பட்டு அதன் விளைவாக எண்ணிலா சவால்களுக்கு முகங் கொடுத்துள்ளேன்.
கொழும்பில் உங்களது சேவைகள் என்ன?
கொழும்பில் நடைபாதை வியாபாரிகளுக்கு இடங்களைப் பெற்றுக் கொடுத்து அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தேன். தீயணைப்பு பிரிவின் சேவையை மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு பயனாகும் வகையில் பயன்படுத்தினேன். பின்தங்கிய பிரதேச மக்களுக்கு நீர் வழங்கலை முன்நின்று பெற்றுக் கொடுத்தமை.
மேல் மாகாணத்தில் 60 பாடசாலைகளின் அபிவிருத்திக்காக 201 மில்லியன் ரூபா நிதியை உடனடியாக வழங்கினேன். 32 சமய வழிபாட்டு தளங்களின் புனரமைப்பிற்காக 26 மில்லியன் ரூபா வழங்கியமை, யுத்த நிறுத்தத்தின் போது யாழ்ப்பாணத்தை மீளக் கட்டி யெழுப்புவதற்கு பங்களிப்பு செய்துள்ளேன். 20 ஆண்டுகளுக்கு மேலாக அசாத் சாலி பவுண்டேஷன் ஊடாக தொடர்ச்சியாக வருடாந்தம் 10,000 உலர் உணவுப் பொதிகளை வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மூவின சார்ந்த மக்களுக்கு பகிர்ந்தளித்து வருகின்றேன்.
நோன்பு காலத்தில் கடந்த 22 வருடமாக அசாத் சாலி பவுண்டேஷன் சார்பாக ஆதரவற்ற குடும்பங்களுக்கு உதவுதல், அசாத் சாலி பவுண்டேஷன் 1 லட்சத்து 50 ஆயிரம் மூக்குக் கண்ணாடி வழங்கியுள்ளேன். ஆதரவற்ற குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிப்பதற்கு மற்றும் பாடப் புத்தகங்கள் கல்வி நடவடிக்கைகளுக்கு கை கொடுத்து வருகிறேன். தெமட்ட கொடை கைரியா முஸ்லிம் மகளிர் பாடசாலைக்கு இட நெருக்கடியால் அருகில் உள்ள காணிகளை பெற்றுக் கொடுக்க ஆணி வேராக நின்று உழைத்துள்ளேன்.
போலிசாரின் பல வருட முயற்சியிலும் முடியாமல் போயிருந்த காலி முகத்திடல் திட்டத்தில் துணிந்து பிரதான சுற்றுவட்டப் பகுதியின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முக்கிய திட்டத்தை முன்னெடுத்து நடத்தி முடித்தமை. 40 வருடங்களின் பின்னர் கொழும்பு 06 ஈஸ்வரி வீதியை அகலப்படுத்தி போக்குவரத்தினை மேம்படுத்தியுள்ளேன்.
இவ்வாறு நீண்ட மக்கள் நல நடவடிக்கைகள் துணிந்து மேற்கொண்ட அனுபவமும் திறமையும் கொண்டுள்ளேன். முஸ்லிம் சமூகம் சார்ந்த பிரச்சனைகள். முஸ்லிம்களது ஜனசார எரிப்பு விடயத்திலும், பலஸ்தீன் விடயத்திலும் தலைநகரில் பாரிய ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புக்களையும் முன் நின்று நடத்தியுள்ளேன். அதற்காக சிறைவாசமும் சென்றுள்ளேன்.
முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள், மற்றும் இஸ்லாமிய விவகாரங்கள், ஹலால், குர்ஆன் ஆடை விவகாரங்கள் பிரச்சினைகள் ஏனைய மதவாதிகள் எழுப்பும் போது அதற்கான உரிமையை பெற்றுக் கொடுப்பதற்காக எதிராக செயல்பட்டவர்கள் நீதிமன்றம் கொண்டு சென்று அவர்களுக்கு தண்டனையையும் பெற்றுக் கொடுத்துள்ளேன்
இனப்பிரச்சினைகள் எழும்போது எனது குரல் கொழும்பில் மட்டுமல்ல முழு இலங்கையிலும் ஒலிக்கும் நான் அநீதி இழைக்கும் போது தைரியமாக அவ்விடத்துக்கு சென்று அப் பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளார். ஒவ்வொரு வாரமும் ஊடகம் வாயிலாக அவ்வப்போது எழும் பிரச்சினைகள் முழு உலகுக்கும் மும்மொழிகளிலும் கொண்டு சென்று வருகின்றேன்.
ஆகவே தான் இதனை விட பல அபிவிருத்திகள் உரிமைகளை பெற்றுக் கொடுக்க கொழும்பு வாழ் மக்கள் என்னை பாராளுமன்றம் அனுப்பினால் அரசின் உதவி இன்றி வெளிநாட்டுத் திட்டங்களை வகுத்து எனக்கு பல்வேறு அபிவிருத்திகளை கொழும்பு மாவட்டத்தில் செய்து கொடுக்க முடியும் என அசாத் சாலி தெரிவித்தார்
0 comments :
Post a Comment