எனக்கு சந்தர்ப்பத்தை மக்கள் தந்தால் கல்வி உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கே முன்னுரிமை. ஊடக சந்திப்பில் கலாநிதி ஜெமீல்.



மது பிரதேசம் கல்வி உள்ளிட்ட உட்கட்டமைப்பு விடயங்களில் பின்னிலையில் இருக்கின்றது. அவைக்கள சீர்செய்யப்பட வேண்டும். அத்துடன் அரசியல் ரீதியில் கல்முனைக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. கல்முனையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்காக நன்கு சிந்தித்து செயற்படக் கூடிய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அவசியமாகிறது. எனக்கு மக்கள் சந்தர்ப்பம் தந்தால் மக்களது எதிர்பார்ப்பை நிவர்த்திக்க என்னை அர்ப்பணித்து செயற்படுவேன் என்று; இன்று (11) சீ பிரீஸ் சுற்றுலா விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலாநிதி ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார்

ஹக்கீம் கிழக்கின் கட்சி பிரமுகர்களுக்கு செய்த துதோகத்திற்கு இன்று அவர் தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனக்கு கிடைக்க வேண்டிய கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை காசுக்காக ஹாபீஸ் நஸீர் அஹமட்டுக்கு ஹக்கீம் வழங்கினார். இன்று ஹாபீஸ் நசீரும் அவருடன் இல்லை.

இத்தேர்தலில் ஹக்கீம் செய்த துரோகத்தனத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இத்தோடு கட்சியின் தலைமைத்துவம் மாற்றப்படும்.

ஹக்கீம் ஹரீஷுக்கு செய்த அநீதிக்கு இத்தேர்தலில் கல்முனை மக்கள் முஸ்லிம் காங்கிரஸை தோற்கடித்து காட்டுவர்.

மலாக்கா காணி விவகாரத்தில் என்னை சம்பந்தப்படுத்தி எனது செல்வாக்கை குறைப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.

என்றும் அந்த கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் தெரிவித்தார்.
இன்னும் உள்ள குறுகிய காலத்துக்குள் மக்கள் நன்றாக யோசித்து தங்களது பெறுமதியான வாக்குகளை வழங்க வேண்டும் என்றும் தற்போது களத்தில் உள்ள எந்த கட்சி சுதந்திரமாக செயற்பட்டு மக்கள் நல திட்டங்களில் ஈடுபடும் என்றும் போட்டியாளர்களில் சர்வதேச தொடர்புள்ளவர்கள் யார் என்பதையும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுடன் நீண்டநேரம் உரையாடியதன் பின்னரே தான் தேர்தலில் போட்டியிட களத்தில் இறங்கியதாகவும் துரோகத்துக்கு பலியான அவர் என்னை வெற்றியடையச் செய்ய உதவுவதாக தெரிவித்திருந்தார் என்றும் அதன் பின்னரே தான் களத்தில் இறங்கியதாகவும் தெரிவித்தார்.

மாவட்டம் முழுவதும் விஜயம் செய்து தற்போதுள்ள களநிலவரங்களை அவதானித்தேன் சிலிண்டர் கல்முனையை மையப்படுத்தி ஒரு ஆசனத்தை பெறுவதட்க்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. எனவே மக்கள் நன்றாக யோசித்து வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :