பிரித்தானியாவில் உள்ள வைஸ்ட்மினிஸ்டர் (West Minister) பல்கலைக்கழகத்தில் கணனி விஞ்ஞான கற்கை நெறியில் அப்துல் ஹக்கம் முதல் தரத்தில் முதலிடம் பெற்று சித்தி அடைந்துள்ளார். இரண்டு வருடம் முன்னதாகவே தனது க.பொ.த உயர்தர பரீட்சையை 16 வயதில் சிறந்த பெறுபேறுகளுடன் முடித்த இவர், தனது 21 ஆவது வயதில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
தற்போது ஹக்கம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொடர்பான நிறுவனம் ஒன்றில் வேலை பெற்று, அந்தத் துறைசார் பொறியியளாளராகக் கடமை ஏற்றுள்ளார்.
இவர், கல்ஹின்னையைச் சேர்ந்த சிரேஷ்ட பட்டயக் கணக்கறிஞர் எஸ்.ஏ. அஸீஸ் மற்றும் சித்தி பரீதா ஆகியோரின் அன்பு புதல்வராவார்.
0 comments :
Post a Comment