சுகாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்தளங்களை மதிப்பீடு செய்யும் விசேட வேலைத்திட்டம்



மாளிகைக்காடு செய்தியாளர்-
சுகாதார அமைச்சின், சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்புரைக்கு அமைவாக கல்முனை பிராந்தியத்தில் உள்ள சுகாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்தளங்களை மதிப்பீடு செய்யும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினை மதிப்பீடு செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய சுற்றுச்சூழல் தொழில் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் சுகாதார மேம்பாட்டினை மதிப்பீடு செய்யும் பொருட்டு அவர்களின் உடல் திணிவுச் சுட்டி, இரத்த அழுத்த அளவீடு, பல் மருத்துவ சேவை உள்ளிட்ட இரத்தப் பரிசோதனைகளும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம்.ரயீஸ், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி டொக்டர் எம்.எச்.சனூஸ் காரியப்பர், பிராந்திய வாய் சுகாதார பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஹபீப் முஹம்மட் உள்ளிட்ட சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

சுகாதாரத்தை மேம்படுத்தும் மதிப்பீட்டு அறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து சாய்ந்தமருது பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.முஆபிக்கா, நிருவாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்சான் ஆகியோருடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :