நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை துரிதப்படுத்துவதுடன், மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்கள் முன்னெடுத்து வருகின்றார்கள்.
அனர்த்த நிலைமை தொடர்பில், கிழக்கு மாகாண ஆளுநர், அம்பாறை மாவட்ட செயலாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளை இன்று (26) தொடர்புகொண்டு பேசிய பாராளுமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தேவையான உதவிகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேவேளை, வெள்ளத்தினால் இழுத்து வரப்பட்டு சாய்ந்தமருதில் உள்ள கரைவாகு ஆற்று பாலத்தில் தேங்கி, வெள்ள நீர் வடிந்தோட தடையாக உள்ள சல்வீனியா தாவரங்களை அகற்றுமாறு கல்முனை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளரை பாராளுமன்ற உறுப்பினர் தொடர்புகொண்டு பேசியதன் காரணமாக, சாய்ந்தமருது பிரதேச செயலாளரின் கண்காணிப்பின் கீழ் நீர்ப்பாசன திணைக்களத்திற்குச் சொந்தமான கணரக வாகன உதவியுடன் சல்வீனியா அகற்றும் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment