முஸ்லிம் சமூகத்திற்கும், அம்பாறை மாவட்டத்திற்கும், கல்முனை தொகுதிக்கும் சகோதரர் ஏ.எம். ஜெமீல் மாகாண சபை உறுப்பினராக, அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவராக இருந்து செய்த நிறைய சேவைகள் பற்றி நன்றியுடன் நினைவு கூர்ந்த கல்முனை சகோதரர்கள் தமது ஆதரவை அணி திரண்டு வெளியிட்டதுடன் புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னம், மூன்றாம் இலக்க வெற்றி வேட்பாளர் ஏ.எம். ஜெமீல் அவர்களுடைய கரத்தினை பலப்படுத்தி ஜெமீல் அவர்களின் வெற்றிக்காக முழுமையாக களத்தில் இறங்கி தேர்தல் பணி செய்ய முன்வந்துள்ளார்கள்.
இந்த தேர்தல் செயற்பாட்டு காரியாலய திறப்பு விழாவில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சப்ராஸ் மன்சூர், ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் நூருல் ஹுதா உமர், சமூக செயற்பாட்டாளர் எம்.ஏ. கரீம், சிரேஷ்ட அறிவிப்பாளர் ரோஷன் அஸ்ரப், இளைஞர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் எப்.எம். தில்ஷாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்த நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் முன்னிலை செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment