எனக்கு இருபது வருடங்கள் தேவையில்லை; ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் என்கிறார் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் சிராஸ்



ல்முனையும் திகாமடுல்ல மாவட்டமும் அரசியல் அனாதையாக இருக்கின்றது. அதனை சீர்செய்து தருகிறேன், எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் என்று மக்கள் மன்றில் கோரிக்கை விடுத்தார், திகாமடுல்ல மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்.

சாய்ந்தமருதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்டத்தில் கல்முனைத் தொகுதியின் 3 இலக்க வேட்பாளர் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபை ஆதரித்து இடம்பெற்ற மாபெரும் பிரசார பொதுக்கூட்டம் 2024.11.08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது மருதூர் சதுக்கத்தில் மழைக்கு மத்தியிலும் இடம்பெற்றது இங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்முனை மாநகரசபை தேர்தலின்போது அரசியலில் களமிறங்கி வெறும் நாற்பதே நாட்கள் அரசியல் செயற்பாட்டில்; 17000 க்கும் அதிகபடியான வாக்குகளை சாய்ந்தமருது மண் எனக்கு வழங்கியது. கிடைத்த இரண்டு வருடமும் சாய்ந்தமருது உள்ளிட்ட மாநகரசபையின் மூலைமுடுக்கெல்லாம் சென்று ஒரு மாநகர முதல்வர் என்னவெல்லாமோ செய்ய முடியுமோ அத்தனையும் செய்தேன். எனது குறுகிய அந்த இரண்டுவருட ஆட்சிக் காலத்திலேயே சாய்ந்தமருது சிறுவர் பூங்கா மற்றும் கரையோரத்தில் அமைந்துள்ள நூலகம் போன்றவற்றை அமைத்தேன். எல்லா சமூகங்களையும் ஒன்று திரட்டி கல்முனை மாநகரசபையில் நல்லாட்சி ஒன்றை நிறுவி ஏனைய மக்களும் பேசும் அளவுக்கு செய்து காட்டினோம்.

அப்படி இருக்கின்ற சந்தர்ப்பத்தில் இந்த ஊரில் உள்ள சில குள்ள நரிகள் ஊருக்கு எதனையும் செய்வதும் இல்லை. செய்ய விடுவதுமில்லை என்ற அடிப்படையில் ஊர் எப்படிப்போனாலும் பரவாயில்லை தடுத்துக்கொண்டே இருக்கின்றனர். இது ஊரில் உள்ள கேடான ஒரு விடயமாகும். நான், இங்கு தைரியமாக பேசுகிறேன் என்றால் இந்த மக்களுக்கு எதையே செய்து விட்டுத்தான் பேசுகின்றோம் என்றார்.

இந்த மக்களுக்காக நான் செய்வேன் என்று கருதுவீர்களானால்; எனக்கு குறைத்து பத்தாயிரம் வாக்குகளை பெற்றுத்தாருங்கள் மாவட்டத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று இந்த மகன், மக்களது தேவைகளை நிறைவேற்றுவான் என்பதை மக்கள் மன்றில் தெரிவிக்கின்றேன் என்றார்.

சாய்ந்தமருதுக்குக் கிடைத்துள்ள சிறந்த சந்தர்ப்பம் இதனைத் தவறவிட்டால் இவ்வாறானதொரு சந்தர்ப்பம் கிடைக்காது என்றும் தெரிவித்தார்.

தனக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்தால் எனக்கு அங்கு வழங்கப்படுகின்ற ஊதியன்களைக் கூட இந்த மக்களுக்காக செலவிடுவேன் என்றும் இவ்வாறான வழிமுறைகளை தான் கல்முனை முதல்வராக இருந்த காலத்தில் செய்து காட்டியதாகவும் தெரிவித்தார். அத்துடன் பாராளுமன்றத்தில் புதிய சட்டங்கள் ஏற்றப்படும் போது சலுகைகளைப் பெற்றுக்கொண்டு மௌனிகளாக இருக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழு ஏற்பாடு செய்திருந்த பிரச்சார கூட்டம் கொட்டும் மழையிலும் இடம்பெற்றது. கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கூட்டத்துக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் விசேட அதிதிகளாக சாய்ந்தமருது மத்திய குழுவின் அமைப்பாளர் பிர்தௌஸ் ஆசிரியர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு செயலாளரும் உயர் பீட உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன், சாய்ந்தமருது மத்திய குழுவின் செயலாளரும் உயர் பீட உறுப்பினருமான ஜலால்டீன், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அமானுல்லா மற்றும் சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். வித்தியாலய முன்னாள் அதிபர் ஏ.எல்.எம்.சியாத், சாய்ந்தமருது மத்திய குழுவின் பிரதிச் செயலாளர் அஸ்வர் மற்றும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் நிசார், வேட்பாளர் திலக் காரிய வசம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :