தேசிய வாசிப்பு மாத பொது அறிவுப் போட்டி : வெற்றிகொண்டது மஹ்மூத் தரம் பதினொன்று மாணவிகள் அணி



நூருல் ஹுதா உமர்-
2004ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் தேசிய வாசிப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் "வழி காட்டும் தாரகைகளாம் நூல்கள் வாசிப்பால் வென்றிடுவோம் நாங்கள்" எனும் தொனிப்பொருளில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் 2024 ம் ஆண்டுக்கான வாசிப்பு மாத நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றன.

தேசிய வாசிப்பு மாதமாகிய அக்டோபர் மாதத்தை சிறப்பிக்கும் வகையில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) நூலக குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்ட பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சி நூலக பொறுப்பாளர் ஏ.எல். நளீம் தலைமையில் கல்லூரியின் நவீனமயப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரியின் முதல்வர் ஏ. பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) கலந்து கொண்டார். மாணவிகளின் பொது அறிவின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் நூலக குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்ட பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சியில் மஹ்மூத் மகளிர் கல்லூரி தரம் 10 மற்றும் 11 பிரிவு மாணவிகளுக்கிடையே தலா ஆறு பேர் கொண்ட இரு குழுக்களுக்கிடையில் மூன்று கட்ட சுற்றுப்போட்டிகளாக இடம்பெற்றன.

பொது அறிவுப் போட்டியின் நடுவர்களாக கல்லூரியின் உதவி அதிபர்களான எம்.எஸ். மனூனா, என்.டி. நதீகா, நிகழ்ச்சி தயாரிப்பாளர் எஸ்.எச். ஆமினா உம்மா, தொகுப்பாளராக ஆசிரியர் எம்.ஏ. அஸ்வர், முழுமையான கணினி மயப்படுத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிக்கு கணினி தொழில்நுட்ப உதவியாளர் முஸ்தபா முபாரக் ஆகியோர் நெறிப்படுத்தி மிக நேர்த்தியாக நடத்தியிருந்தனர்.

இறுதிவரை விறுவிறுப்பாக நடைபெற்ற பொது அறிவு போட்டியில் தரம் 11 மாணவிகள் 100 புள்ளிகளையும் தரம் 10 மாணவிகள் 70 புள்ளிகளை பெற்ற கொண்டதுடன் மேலதிக 30 புள்ளிகளினால் தரம் 11 மாணவிகள் சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டனர்.போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிதிகள் மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான ஹாஜியானி எஸ்.எஸ்.எம். சமதா மசூது லெவ்வை, ஏ.எச் நதிரா, உதவி அதிபர் எம்.எஸ் மனூனா, என்.டி. நதீகா, ஏ. தஸ்லிமா, ஆசிரியர்கள், நூலக உத்தியோகத்தர்கள், நூலக சங்கத்தின் மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :