முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் சிராஸின்நிகழ்வில் படையெடுத்த பெண்கள்!



திகாமடுல்ல மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 3 இலக்க வேட்பாளர் கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் சாய்ந்தமருது வீட்டு; திறந்த வெளியில் 2024.11.10 ஆம் திகதி பெண்களுக்கான ஒன்றுகூடல் இடம்பெற்றது இந்நிகழ்வுக்கு பெண்கள் அணியினர் திரளாய் வந்து பங்கு கொண்டிருந்தனர்.

பிரதேச பெண்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்த திரளான பெண்கள் அணியினரை நோக்கி உரையாற்றிய வேட்பாளர் சிராஸ், எனக்கு இருபது வருடங்கள் தேவையில்லை; ஒரு சந்தர்ப்பம் தாருங்கள்; கல்முனையும் திகாமடுல்ல மாவட்டமும் அரசியல் அனாதையாக இருக்கின்றது. அதனை சீர்செய்து தருகிறேன் என்று மக்கள் மன்றில் கோரிக்கை விடுத்தார் திகாமடுல்ல மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்.

கல்முனை மாநகரசபை தேர்தலின்போது அரசியலில் களமிறங்கி வெறும் நாற்பதே நாட்கள் அரசியல் செயற்பாட்டில்; 17000 க்கும் அதிகபடியான வாக்குகளை சாய்ந்தமருது மண் எனக்கு வழங்கியது. கிடைத்த இரண்டு வருடமும் சாய்ந்தமருது உள்ளிட்ட மாநகரசபையின் மூலைமுடுக்கெல்லாம் சென்று ஒரு மாநகர முதல்வர் என்னவெல்லாமோ செய்ய முடியுமோ அத்தனையும் செய்தேன். எனது குறுகிய அந்த இரண்டுவருட ஆட்சிக் காலத்திலேயே சாய்ந்தமருது சிறுவர் பூங்கா மற்றும் கரையோரத்தில் அமைந்துள்ள நூலகம் போன்றவற்றை அமைத்தேன். எல்லா சமூகங்களையும் ஒன்று திரட்டி கல்முனை மாநகரசபையில் நல்லாட்சி ஒன்றை நிறுவி ஏனைய மக்களும் பேசும் அளவுக்கு செய்து காட்டினோம்.

அப்படி இருக்கின்ற சந்தர்ப்பத்தில் இந்த ஊரில் உள்ள சில குள்ள நரிகள் ஊருக்கு எதனையும் செய்வதும் இல்லை. செய்ய விடுவதுமில்லை என்ற அடிப்படையில் ஊர் எப்படிப்போனாலும் பரவாயில்லை தடுத்துக்கொண்டே இருக்கின்றனர். நான், இங்கு தைரியமாக பேசுகிறேன் என்றால் இந்த மக்களுக்கு எதையே செய்து விட்டுத்தான் பேசுகின்றோம் என்றார்.

இந்த மக்களுக்காக நான் செய்வேன் என்று கருதுவீர்களானால்; எனக்கு இந்த ஊரில் இருந்து குறைத்து பத்தாயிரம் வாக்குகளை பெற்றுத்தாருங்கள் மாவட்டத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று இந்த மகன், மக்களது தேவைகளை நிறைவேற்றுவான் என்பதை மக்கள் மன்றில் தெரிவிக்கின்றேன் என்றார்.

சாய்ந்தமருதுக்குக் கிடைத்துள்ள சிறந்த சந்தர்ப்பம் இதனைத் தவறவிட்டால் இவ்வாறானதொரு சந்தர்ப்பம் கிடைக்காது என்றும் தெரிவித்த அவர்,

தனக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்தால் அங்கு வழங்கப்படுகின்ற ஊதியன்களைக் கூட இந்த மக்களுக்காக செலவிடுவேன் என்றும் இவ்வாறான வழிமுறைகளை தான் கல்முனை முதல்வராக இருந்த காலத்தில் செய்து காட்டியதாகவும் தெரிவித்தார். அத்துடன் பாராளுமன்றத்தில் புதிய சட்டங்கள் ஏற்றப்படும் போது சலுகைகளைப் பெற்றுக்கொண்டு மௌனிகளாக இருக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

நிகழ்வின்போது சிராஸின் மனைவி மற்றும் அவரது சகோதரி பெரோஷா ஆகியோர் உரையாற்றியது விசேட அம்ஷமாகும்.  

நிகழ்வுக்கு விசேட அதிதிகளாக சாய்ந்தமருது மத்திய குழுவின் அமைப்பாளர் பிர்தௌஸ் ஆசிரியர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அமானுல்லா மற்றும் சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். வித்தியாலய முன்னாள் அதிபர் ஏ.எல்.எம்.சியாத் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




























 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :