ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியின் ஆதரவாளர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தேற்றாத்தீவில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இக் கேள்விளை எழுப்பியுள்ளார்.
இப்பிரச்சாரக் கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் கோ.கருணாகரம்,
ஆட்சிக்கு வரும் முன்னரும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னரும் மக்கள் விடுதலை முன்னணியும் அதன் பரிணாமம் பெற்ற தேசிய மக்கள் சக்தியும் எமது வட கிழக்குத் தமிழர் தாயகம் தொடர்பான எமது தார்மீக உணர்வுகள் தொடர்பாக தெளிவான புரிதலுடன், தெளிவான பார்வையுடன் பார்க்கப்படாத நிலையே இருந்து வருகிறது.
எமது கோரிக்கை தொடர்பாக இன்னமும் நழுவல் போக்கையே கடைப்பிடித்து வருகிறது. வட கிழக்குத் தமிழர் தாயகத்துக்கேயுரிய தனியான பிரச்சினைகள், ஆயதப்Nபுhராட்டம் உருவான வரலாறு அதன் பால் தமிழர்கள் ஈர்க்கப்பட்ட வரலாறு யாவும் அறிந்தும் இன்னமும் தென்பகுதிப் பிரச்சினைகளுடன் சமரசம் செய்யும் போக்கே தேசிய மக்கள் சக்தியினரிடம் காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்திய இலங்கை ஒப்பந்தம் அதன் அடிப்படையிலான 13ஆவது அரசியல் சீர்திருத்தம் இவைபற்றி இன்னமும் தெளிவான கருத்துக்களை ஜனாதிபதியோ அவரது அமைச்சர்களோ கூறுவதைத் தவிர்த்து மக்கள் விடுதலை முன்னணி தலைவர்கள் ஊடாக சமஸ்டி வழங்கமாட்டோம் தனிநாடு வழங்கமாட்டோம். பிரிவினைக்கு இடமளியோம் என்று பழைய பல்லவிகளை தமது கற்பனைகளுக்கூடாகக் கூறி வருகின்றார்கள். மக்கள் விடுதலை முன்னணி இவ்வாறு கூறிவருவதையே வழக்கமாக கொண்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி ஆயதப் போராட்டத்தில அதிதீவிரமாக ஈடுபட்டு இரு தடவை ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயன்று இறுதியில் ஜனநாயக வழிக்கு வந்தது போலவேநாமும் ஆயுதப் போராட்டத்தின் மூலமே எமது இலட்சியத்தை அடைய முடியும் என்று ஆயுதம் ஏந்திப் போராடி சர்வதேச தலையீடுகளின் பின்னர் ஜனநாயகப் போராட்டத்துக்குள் வந்தவர்கள். இன்று நாம் தனி ஈழம், தனிநாடு, சமஷ்டி என்று கோரிக்கைகளை முன்வைக்கவில்லை. எமது கோரிக்கை பிளவுபடாத பிரிக்கப்பட முடியாத ஒன்றுபட்ட நாட்டில் ஒற்றுமையாகவும் சமத்துவமாகவும் எமது வட கிழக்கு தாயகத்தை நாமே அபிவிருத்தி செய்யக்கூடிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு நடைமுறையையே நாம் கோரி நிற்கிறோம். இதனை நாம் அரசிடம் பிச்சையாக கோரவில்லை. இது எமது பிறப்புரிமையின் வெளிப்பாடு.
இதற்காக நாம் அரசுடன் இணையப் போவதுமில்லை. எம்மை அரசுடன் இணைய அழைக்கின்றார்கள் என்று கூறப் போவதுமில்லை. எம்மவர்களுடன் கரந்துரையாட அமைச்சுப் பதவிகளைப் பெறுவதில் தவறில்லை என்றும் கூறவில்லை. திருமணம் முடிக்கும் முன்னமே பிள்ளைக்குப் பிறந்தநாள் கொண்டாடும் அவசியமும் எமக்கில்லை. பிறப்புரிமையான சுயாதீனம் எமது சுய கௌரவமும், எமது மண்ணும், எமது மொழியும் எமது தாயகமும் பாதுகாக்கப்படவேண்டும் என்பதே எமது இலட்சியம். இதனை ஆட்சியார்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே கூறுகின்றேன். ஆட்சியாளர்களுன் முரண்பட வேண்டும் என்பது எனது ஆசையல்ல.
0 comments :
Post a Comment