எட்டு ஆசனங்களுடன் இலங்கையில் மூன்றாவது தனிப் பெரும் சக்தியாக இலங்கை தமிழரசுக் கட்சி



வி.ரி.சகாதேவராஜா-

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் எட்டு ஆசனங்களுடன் இலங்கையில் மூன்றாவது தனிப் பெரும் சக்தியாக இலங்கை தமிழ் அரசுக்கட்சி தெரிவாகி சாதனை படைத்துள்ளது.

இம்முறை தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) மொத்தமாக இரண்டு லட்சத்து 57ஆயிரத்து 813 வாக்குகளை பெற்று சாதனை படைத்தது.


இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியில் இருந்து..

1. சி. சிறிதரன்(யாழ்மாவட்டம்)

2. இரா.சாணக்கியன்(மட்டக்களப்பு மாவட்டம்)

3. ஞா.ஶ்ரீநேசன் (மட்டக்களப்பு மாவட்டம்)

4. இ.ஶ்ரீநாத்(மட்டக்களப்பு மாவட்டம்)

5. க.கோடீஷ்வரன்(அம்பாறை மாவட்டம்)

6. ச.குகதாசன்(திருகோணமலை மாவட்டம்)

7. க.ரவிகரன்(வன்னி, மாவட்டம்)

8. (தேசியபட்டியல் உறுப்பினர்)

முதலாவது அமர்வு எதிர்வரும் 21/11/2024 வியாழக்கிழமை மு.ப,10, மணிக்கு கூட்டப்படும். அன்று 225, உறுப்பினர்களும் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

அங்கு இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி மூன்றாவது பெரும்பான்மை ஆசனங்களை கொண்ட கட்சியாக இந்தத்தடவை இலங்கை தமிழ் அரசுக்கட்சி செயல்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது..!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :