இதுபற்றி பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துக் கடிதத்தில் உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி முப்தி தெரிவித்துள்ளதாவது,
தங்களை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்ததன் மூலம் ஜனாதிபதி அநுரகுமார கல்முனை தொகுதி மக்களை கௌரவித்துள்ளார்.
திகாமடுல்ல மாவட்டத்திலும் கல்முனை தொகுதியிலும் தேசிய மக்கள் சக்திக்கு எமது ஆதரவை நாம் தேர்தலின் போது தெரிவித்த போது தாங்கள் எமது இல்லம் வந்து எமது ஆதரவை ஏற்றுக்கொண்டீர்கள்.
தேசிய மக்கள் சக்திக்கு பகிரங்கமாக ஆதரவை தெரிவித்து கல்முனைத்தொகுதியிலும் திகாமடுல்ல மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என கல்முனையில் இருந்து கொண்டு பகிரங்கமாக சொன்ன ஒரேயொரு முஸ்லிம் கட்சி உலமா கட்சியாகும்.
இந்த வகையில் இந்த நியமனத்தை முன்னிட்டு நாம் மகிழ்ச்சியுறுகிறோம்.
அதே போல் எம்மைப்பொறுத்த வரை கல்முனைத்தொகுதிக்குள் வாழும் அனைத்து மக்களையும் பிரதேச வேறுபாடுகள் பாராது அனைவரும் கல்முனைத்தொகுதி மக்கள் என்ற ஒற்றுமைக்காக நாம் பாடு படுபவர்கள் என்பதால் தங்களின் இந்த நியமனம் மூலம் கல்முனைத்தொகுதி வளம் பெற்று, ஊழல், துஷ்பிரயோகம் இன்றி அபிவிருத்தியில் சிறப்புறும் என எதிர் பார்க்கிறோம்.
0 comments :
Post a Comment