திருமதி காயத்திரி செனிவிரத்ன அவர்களும் திரு சாலேந்திரா மென்டிஸ் அவர்களும் துணைத் தலைவர்களாகவும், திரு உதார தர்மசேன செயலாளராகவும், திரு முகமட் கஸ்ஸாலி பொருளாளராகவும் நியமிக்கப்பட்டனர். இந் நிகழ்வின் போது 2023/2024 வருடம், சங்கத்தின் சாதனைகள் நினைவுகூரப்பட்டன, இவற்றில் பிரதானமாக சங்கத்தின் அனுசரணையுடன் முதன்முதலாக இரண்டு நாட்கள் வெற்றிகரமாக நடாத்தப்பட்ட சர்வதேச டிஜிட்டல் சந்தைப்படுத்தல் உச்சிமாநாடு, புதிய திட்டங்களின் ஆரம்ப நிலைகள், அரசாங்க நிறுவனங்களுடனான பிரதான கொள்கை பரிமாற்றங்கள் என்பன குறிப்பிடத்தக்கன.
இந்த வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு புதிய தலைமைத்துவம் 2025 ஆம் ஆண்டின் சங்கத்தின் திட்ட வளர்ச்சி வரைபில் பிரதானமாக குறிப்பிடப்பட்ட விடயங்களில் கூடிய கவனம் செலுத்தவுள்ளது. இவற்றில் பின்வருவன உள்ளடக்கப்படும்.
டிஜிட்டல் மேம்பாடு: டிஜிட்டல் மார்க்கட்டிங் சேவைகளை மேம்படுத்தல், சுற்றுச்சூழல் அமைப்புகளை விரிவுபடுத்துதல்
மூலோபாய பங்காளர்கள்: டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான கொள்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அவற்றை செயற்படுத்த அரசாங்க நிறுவனங்கள் மற்றும் சர்வதேச பங்காளர்களுடனான உறவை வலுப்படுத்திக் கொள்ளுதல்
சமுதாய வளர்ச்சி: டிஜிட்டல் சந்தைப்படுத்தல் திறன்களை விருத்தி செய்வதற்கான பயிற்சிகளை வழங்குதல், பெண்கள் சார்ந்த நிறுவனங்களுடன் (ShelovesData) இணைந்து பிரத்தியேகமான நிகழ்ச்சி திட்டங்களின் ஊடாக (tech via Women’s chapter) பின்தங்கிய சமுதாயத்தினர் வளர்ச்சிக்கு உதவுதல். கற்றல் முன்முயற்சிகளினால் டீஜிட்டல் சந்தைப்படுத்தலில் ஈடுபடவுள்ள அடுத்த தலைமுறையை சார்ந்தவர்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துதல் போன்றன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஆய்வு முயற்சிகள்: மூலோபாய தீர்மானங்களை எடுப்பதற்கு தரவு சேகரிப்பை மேற்கொள்ளுதல்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் அசோசியேசன் (DMASL) உத்தியோகபூர்வ சங்கமாக மூன்று வருடங்களை பூர்த்தி செய்துள்ளது. மூன்று வருடங்களுக்கு மேலாக டிஜிட்டல் சந்தையின் முன்னேற்றத்திற்காக நாங்கள் பல வினைத்திறன், பயிற்சி பட்டறைகள் போன்றவற்றை நடாத்தியுள்ளோம். விசேடமாக சங்கத்தின் அனுசரணையுடன் இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச டிஜிட்டல் மாநாட்டின் ஊடாக டிஜிட்டல் சந்தைப்படுத்தலின் செயற்பாடுகள் பிரசித்திப் பெற்றுள்ளன என சங்கத்தின் தலைவர் திரு அர்ஜுன் தெரிவித்தார்.
“எதிர்வரும் வருடம் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையை மேலும் விருத்தி செய்வதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம். உத்தியோகத்தர்களுக்கு உதவுதல், சர்வதேச ரீதியில் இலங்கையை ஏற்றுமதி மையமாக அபிவிருத்தி செய்து நாட்டின் தரத்தை உயர்த்துதல். அதேவேளை ஆற்றல்மிக்க இத்துறையில் மென்மேலும் பலரை இணைத்துக் கொள்ளும் இலக்கையும் கொண்டுள்ளோம். உயர்வான தரம், நெறிமுறைகளை காத்தல், இலங்கை டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறை மிகச்சிறந்த செயற்பாடுகளுடன் வளம் பெற சங்கம் அர்ப்பணிப்போடு செயற்படும். எங்கள் அங்கத்தவர்களின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு தொடர்ந்தும் நாங்கள் உதவி செய்து, அவர்கள் சர்வதேச ரீதியில் அனுபவங்களைப் பெற வாய்ப்புகள் வழங்குவோம்,” என திரு ஜெகர் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
வினைத்திறன் மேன்பாட்டிற்கான பயிற்சிகள், ஆராய்ச்சிகள், மூலோபாய பங்காளர்கள் என்பவற்றினூடாக டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் ஒரு செழிப்பான சூழலை எம்மால் உருவாக்க முடியும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். இவற்றினூடாக டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் ஈடுபட்டுள்ள இத்துறையினர் வளம் பெறவும், புதிய முயற்சிகளில் ஈடுபடவும், தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் உலக டிஜிட்டல் பொருளாதார வெற்றிக்கு தமது அளப்பரிய பங்களிப்பையும் அவர்களால் வழங்க முடியும்.
புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் இச் சங்க நிர்வாகக் குழுவினர், சமூக மேம்பாட்டிற்கு தகுதியான பங்காளிகளை இனங்காண்பதற்கான நிகழ்ச்சிகள், டிஜிட்டல் திறன் சம்பந்தமான விடயங்களின் குறைபாடுகளை ஆராய்தல் மற்றும் டிஜிட்டல் சந்தைபடுத்தல் துறையினரின் வலையக்கட்டமைப்பை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றவற்றின் முயற்சிகளுக்கு உதவுவார்கள்.
இலங்கை டிஜிட்டல் மார்க்கெட்டிங் அசோசியேசன் (DMASL), சங்கத்தின் 2025 வருட திட்ட வளர்ச்சி வரைபில் உள்ள தனது இலட்சியங்களை அடையும் நோக்குடன் 2024/2025 காலப்பகுதிக்குள் சக்தியுடன் பிரவேசிக்கின்றது. இச்சங்கம் தனது டிஜிட்டல் சந்தைப்படுத்தலின் செயற்பாடுகளினூடாக தனது அங்கத்தவர்களுக்கு வலுவூட்டல், புதிய திட்டங்கள் வகுத்தல், தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பை வழங்குதல் போன்றவற்றிற்கு அர்ப்பணிப்புடன் தொடர்ச்சியாக செயலாற்றுவதில் உறுதியாக உள்ளது.
0 comments :
Post a Comment