ஜனாதிபதி, விஜித, ஹக்கீம் முரண்பாடான கருத்துக்கள். அதனை அறியாத NPP முஸ்லிம் போராளிகள்.



“முஸ்லிம் கட்சிகளும், தலைவர்களும் இனவாதிகள், அவர்களை நிராகரிக்க வேண்டும்” என்று NPP யின் புதிய முகநூல் முஸ்லிம் போராளிகள் பிரச்சாரத்தினை முன்னெடுத்து வருகின்ற நிலையில், முஸ்லிம், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க உள்ளதாக NPP தலைவர்களில் ஒருவரான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம், தமிழ் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றாமல் தாங்கள் எதிர்பார்க்கின்ற ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே கருத்தை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமும் அண்மையில் கூறியிருந்தார். ரவுப் ஹக்கீமின் இந்தக் கருத்தை சிலர் விமர்சித்தனர் ஆனால் விஜித ஹேரத்தின் அதே கருத்தை எவரும் விமர்சிக்கவில்லை.

அது ஒருபுறமிருக்க, “பழைய இத்துப்போன முஸ்லிம் தலைவர்கள் தேவையில்லை புதிய முஸ்லிம் தலைவர்களை உருவாக்குவோம்” என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறிவருகின்றார்.

இதே அனுரகுமார திசாநாயக்கா அவர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது “பொது தேர்தலில் உங்களது கட்சிக்கு வாக்களியுங்கள். ஆனால் இது ஜனாதிபதி தேர்தல் இதில் எனக்கு வாக்களியுங்கள்” என்று கூறியிருந்தார்.

இங்கே ஒரே கட்சியை சேர்ந்த அனுரகுமார திசாநாயக்க, விஜித ஹேரத் ஆகிய இருவரது முரண்பாடான கருத்துக்களில் எது உண்மை என்று ஆராய்ந்தால் இருவரது கருத்துக்களும் அவர்களுக்கு அவசியமானது.

ஏனெனில் விஜித ஹேரத்தின் கருத்தானது அரசியல் கள நிலவரத்தினை நன்றாக ஆராய்ந்தபின்பு கூறப்பட்ட நடைமுறைக்கு சாத்தியமான கருத்தாகும்.

ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவின் கருத்தானது தேர்தல் மேடைகளில் இளைஞர்களை கவருவதற்கான உணர்ச்சியூட்டும் பிரச்சாரமாகும்.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, பொது தேர்தலில் உங்களது கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூறிய அனுரகுமார திசாநாயக்கா அவர்கள் இந்த தேர்தலில் பழைய இத்துப்போன முஸ்லிம் தலைவர்களை வீட்டுக்கு அனுப்பவேண்டுமென்று ஏன் கூற வேண்டும் ?

இத்துப்போன பழைய தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தில் மாத்திரம்தான் உள்ளார்களா ? ஏன் ஏனைய சிங்கள, தமிழ் சமூகத்தில் இத்துப்போனவர்கள் இல்லையா என்ற கேள்வியை இதுவரையில் எவரும் கேட்டதாக தெரியவில்லை.

எனவே, ஜனாதிபதி அனுரகுமாரவின் கருத்துக்கள் தேர்தலில் வாக்குகளை கவருவதற்கான பிரச்சாரமாகும். அதேநேரம் விஜித ஹேரத்தின் கருத்துக்கள் தேர்தலுக்கு பின்பு நடைபெற உள்ள கள யதார்த்தமாகும்.

அதாவது தேர்தல் பெறுபேறுகளை முன்கூட்டியே துல்லியமாக கணிக்க முடியாவிட்டாலும், தேர்தலுக்கு பின்பு ஆட்சி அமைப்பதற்கு சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு மிக அவசியமானது என்பதனை NPP முஸ்லிம் போராளிகைவிட, விஜித ஹேரத் கணித்திருப்பார் என்பது அவரது கருத்துக்களில் அறியமுடிகின்றது.



முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :