இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் JVP யின் ஆதிக்கத்துக்கு வந்தபின்பு அம்மாணவர்கள் தொடர்ந்து அதே கொள்கையில் இருந்திருந்தால், எப்பவோ இந்த நாட்டை JVP ஆட்சி அமைத்திருக்கும்.
வலதுசாரிக் கொள்கையில் இருப்பது இலகு. கட்டுப்பாடுடன்கூடிய இடதுசாரிக் கொள்கையில் தொடர்ந்து பயணிப்பது கடினம்.
JVP யின் ஆரம்பகால முக்கியஸ்தர்கள் ஏராளமானோர் பின்னாட்களில் JVP யின் கொள்கையை கைவிட்டுவிட்டு முதலாளித்துவ வாதிகளாக மாறினர்.
அந்தவகையில் JVP தலைவரே இனவாதியாக மாறிய வரலாறுகள் இன்றுள்ள முஸ்லிம் புதிய போராளிகளுக்கு தெரியாது. அதாவது நீண்டகாலங்கள் JVP யின் தலைவராக பதவி வகித்த சோமவன்ச அமரசிங்க மற்றும் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச ஆகியோர் JVP வளர்ச்சிக்காக இன்று உள்ளவர்களைவிட அரும்பாடுபட்டவர்கள்.
அப்படியிருந்தும் அவர்கள் பின்னாட்களில் கொள்கையினை மாற்றிக்கொண்டது மட்டுமல்லாது இனவாதியாக முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.
விடையம் அவ்வாறிருக்கும்போது, தேசிய அரசியலை கூர்ந்து கவனிக்காமல், ஊழலை ஒழித்தல் என்ற பிரச்சாரத்துக்கு மயங்கி எங்களது தனித்துவ அடையாளத்தினை இழந்துவிட முடியாது.
சிறுபான்மை முஸ்லிம்களாகிய நாங்கள் தனித்துவ சக்தியாக NPP க்குள் கலக்கலாமே தவிர, எங்களது தனித்துவத்தினை இழந்து அவர்களுக்குள் கரைந்துவிட முடியாது.
ஏனெனில் அனைவரும் மனிதர்கள். அவர்கள் எந்நேரமும் கொள்கை மாறலாம் அல்லது மரணிக்கலாம் என்ற உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
0 comments :
Post a Comment