பாராளுமன்றத்தில் ஒலிப்பதற்கு தகுதியானது SM சபீஸ் குரல் என சாட்சி கூறுவேன் – அ,பற்று ஜம்மியத்துல் உலமா சபை தலைவர்



லமாக்களுக்கு நெருக்கமாக இருந்தவர் இளைஞர்களை வழிப்படுத்தியவர் எஸ் எம் சபீஸ். கொடுங்கோல் புரிந்த கோட்டாவின் கரங்களுக்கு மத்தியில் துணிச்சலுடன் செயற்பட்டவர். சமூகத்துக்காக தன்னை கடுமையாக மாய்த்துக்கொண்டவ.ர் பல எதிர்ப்புக்கள் சதித்திட்டங்களுக்கு மத்தியில் களத்தில் நின்று நாங்கள் எல்லோரும் விரும்பும் வகையில் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்கான பணியை முழுநாட்டுக்கும் முன்னோடியாக நின்று செய்துகாட்டியவர் என்றார் அ,பற்று ஜம்மியத்துல் உலமா சபை தலைவர்.

எனது மாமியின் ஜனாஸாவை அடக்கும்போது நான் என் கண்ணால் கண்ட சாட்சிகளைத்தான் கூறுகின்றேன். மக்கள் பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் போது தனது பணத்தைக்கொண்டு மக்களின் பசி போக்கியவர்.

அக்கரைப்பற்று பெரியபள்ளி வாசலின் அழகு சிங்கப்பூரிலே அல்லது துருக்கி நாட்டிலே உள்ள பள்ளிவாசல்களின் அழகிற்கு ஒப்பானதாக உள்ளது அவரது சிந்தனை எவ்வாறு உள்ளது பிரதேசத்தை நாட்டை எவ்வாறு அழகுபடுத்துவார் என்பதனை இதன்மூலமே கண்டுகொள்ள முடியும்.

அக்கரைப்பற்றின் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவராக சவால்மிகுந்த காலத்தில் கடமை புரிந்து தன் ஆளுமையை வெளிப்படுத்தியவர்.

ஒருகட்சியில் சேர்ந்து குறுகிய காலத்துக்குள்ளயே ஒரு ஜனாதிபதி வேட்பாளரை அழைத்து வரக்கூடிய அளவிற்கு சாமார்த்தியமும் திறமையும் கொண்டவராக இருக்கின்றவர்

உண்மையில் பாராளுமன்றத்தில் ஒலிப்பதற்கு எஸ் எம் சபீஸ் அவர்களின் தகுதியான குரல் என்று நாம் சாட்சி சொல்லலாம் என தெரிவித்தார் அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அல் ஹாபில் கலாநிதி MIM சித்தீக் அஸ்ஹரி அவர்கள்

தனது வெற்றின் பின் மக்களுக்கு முன்னிலைப் படுத்தி செய்துமுடிக்க வேண்டிய தனது திட்டங்களை தேர்தல் விஞ்சாபனமாக ஜம்மியத்தில் உலமா சபை தலைவர் செயலாளர் முன்னிலையில் அக்கரைப்பற்றின் மூத்த உலமா லத்தீப் மௌலவி அவர்களின் கையில் வழங்கி வெளியிட்டு வைத்தார் எஸ் எம் சபீஸ்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :