திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் டி- 100 திட்டத்தின் கீழ் கல்முனை கடற்கரைப்பள்ளிவாசல் மின் விளக்கு அலங்கரிப்பு வேலைத்திட்டத்திற்காக 6.5 மில்லியன் நிதி ஒதுக்கீடும்,மீனவர் ஓய்வு அரை கட்டடத்திற்காக 03 மில்லியன் நிதி ஒதுக்கீடும் மற்றும் வீதி கொங்கிரீட் இடும் வேலைத்திட்டத்திற்காக 7.5 மில்லியன் நிதியும் என மொத்தமாக 17 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேற்படி வேலைத்திட்டங்கள் பூரணமாக நிறைவு செய்யப்பட்டு அதனை இன்று(01) திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இவ் திறப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந் நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.பி.எம் சாஹீர்,கல்முனை மாநகர சபை பொறியியலாளர் ஏ ஜெ ஜெளஸி எ,கல்முனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,கல்முனை முஹைத்தீன் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் புதிய தலைவர் அல்ஹாஜ் எஸ். எம். ஐ அப்துல் அஸீஸ்,செயலாளர் எம்.எச்.எம் முபாரீஸ்(LLB),கல்முனை முன்னாள் மாநகர சபை உறுப்பினர் எம்.எச்.கலீல் ரஹ்மான்,ஏ.எம் பஸீர்,முன்னாள் கடற்கரைப் பள்ளிவாசல் செயலாளர் எம்.ரிசாட், தொழிலதிபர் ஏ.பி ஜெளபர்,முன்னாள் இன்னாள் நிர்வாக சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் கோரிக்கைக்கு அமைய முன்னாள் ஜனாதிபதியின் விசேட நிதியொதுக்கீட்டின் மூலம் இவ் வேலைத்திட்டம் நிறைவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment