தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 13 ஆவது சர்வதேச ஆய்வரங்கு!



லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடம் ஏற்பாடு செய்திருந்த, “நவீன சாதாரண நிலைக்கு உருமாறுதல்: மேலாண்மை மற்றும் வர்த்தகத்தில் புதுமை, ஒருங்கிணைப்பு, மற்றும் நிலைத்தன்மை”(Navigating New Normalcy: Innovation, Integration and Sustainability in management and commerce ) எனும் தொனிப்பொருளிலான 13 ஆவது சர்வதேச ஆய்வரங்கு (AiRC 2024) பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்தின் கேட்போர் கூடத்தில் 2024.12.10 ஆம் திகதி ஆய்வரங்கின் தலைவர் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி, பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது.

ஆய்வரங்கின் இணைப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சரீனா உம்மா கபூரின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் அவர்களும் கௌரவ அதிதியாக பேராசிரியர் கலாநிதி பி. கார்த்திகேயன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

(AiRC FMC SUSL 2024) 13 ஆவது சர்வதேச ஆய்வரங்குக்கு பிரதான பேச்சாளராக பேராசிரியர் கலாநிதி சந்தன அலவத்தகே அவர்கள் நிகழ்நிலையூடாக கலந்துகொண்டு உரையாற்றினார்.

நிகழ்வின்போது முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் முன்னாள் பீடாதிபதி கலாநிதி சபீனா எம்.ஜி.எச். கெளரவிக்கப்பட்டது விஷேட அம்சமாகும்.

AiRC FMC SUSL ஆய்வரங்குக்கு 98 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன அதில் 80 கட்டுரைகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டன.

நிகழ்வின் நன்றியுரையை AiRC 2024 செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.சிராஜி ஆற்றிய அதேவேளை நிகழ்வின் முடிவுரையை பேராசிரியர் கலாநிதி என். கங்காதரன் நிகழ்த்தினார்.

ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் ஞாபக சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

நிகழ்வின்போது சிரேஷ்ட பேராசிரியர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சிரேஷ்ட நூலகர்கள், உதவி பதிவாளர்கள், அனுசரனையாளர்கள், ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தோர், கல்விசாரா உத்தியோகத்தர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.













































 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :