சாய்ந்தமருதில் சுனாமி அனர்த்ததினால் உயிரிழந்தவர்களின் 20 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு!



நாட்டில் கடந்த 2004 டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி, ஏற்பட்ட இயற்கை ஆழிப்பேரலை (சுனாமி) அனர்த்ததினால் உயிரிழந்தவர்களின் 20 வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள், சாய்ந்தமருது வொலிவேரியன் ஹிஜ்ரா மஸ்ஜிதில் (26) இன்று இடம்பெற்றது.

அந்த வகையில் சுனாமியால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மக்கள் குடியேற்றப்பட்டுள்ள சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தின் ஹிஜ்ரா மஸ்ஜிதில் கத்தமுல் குர்ஆன் தமாம் நிகழ்வும் விஷேட துஆ பிராத்தனையும் பள்ளிவாசலின் தலைவர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அபூவக்கர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், ஹிஜ்ரா மஸ்ஜிதின் ஆரம்பகால தலைவரும் சாய்ந்தமருதின் முன்னாள் பிரதேச செயலாளரும், சட்ட ஒழுங்கு அமைச்சினதும் மேலதிக செயலாளரும் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும் பள்ளிவாசலின் சிரேஷ்ட ஆலோசகருமான அல்- ஹாஜ் எ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது பிரதேச செயலக சிரேஷ்ட உத்தியோகத்தர் முகம்மத் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தரும் கலந்து கொண்டிருந்தார்.

கத்தமுல் குர்ஆன் தமாம் மற்றும் விஷேட துஆ பிராத்தனை நிகழ்வுக்கு சாய்ந்தமருது ஹத்தீப் முஹத்தீன் சம்மேளனத்தின் தலைவரும் சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலின் பேஷ் இமாமுமான அல்-ஹாஜ் எம்.ஐ.எம். ஆதம்பாவா (ரஷாதி) அவர்கள் தலைமை வகித்தார்.

பள்ளிவாசலின் செயலாளர் கே.எம்.முகம்மட் சஹீது மற்றும் பொருளாளர் யூ.எல்.எம். நிப்ராஸ், பள்ளியின் இமாமம் ஜெ.எம்.ஷபீர் ஆகியோரது வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களின் இமாம்கள், மதரஸா மாணவர்கள் பிரதேசவாசிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 2004 ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை அனர்தத்தினால் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேசன் அதிகமான உயிரிழப்புக்களையும் , சேதங்களை சந்தித்த பிரதேசமாகும். சாய்ந்தமருதில் 1334 பேரும் மாளிகைக்காட்டில் 204 பேரும் உயிரிழந்ததுடன் பாரியளவிலான சேதங்களும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

















 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :