கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் 2015 ஆம் ஆண்டில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரம் கல்வி கற்ற மாணவர்களின் ஒழுங்கமைப்பிலான சீருடை வெளியீட்டு நிகழ்வானது நேற்று முன்தினம் (22) பாடசாலையின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக பற்றிமா கல்லூரி முன்னாள் அதிபர் அருட் சகோதரர் ஸ்டீபன் மத்தியூ , அருட்சகோதரி பிரியசாந்தி ( உப அதிபர் ),அருட் சகோதரர் தேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மங்கள விளக்கேற்றல் அதிதிகள் உரைகள், கலாச்சார நிகழ்வுகள் என்பன இடம் பெற்றன.
2015 ஆம் ஆண்டு பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களால் ஒழுங்கமைப்பு செய்யப்பட்ட மாணவர் பிரிவு சீருடை, அதிதிகளினால் வெளியீடு செய்யப்பட்டது.
0 comments :
Post a Comment