சிலிக்கா நிறுவனத்தின் தலைவி கலாநிதி தேசமான்ய பாத்திமா ருஷ்தா தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வின் முதல் நாள் நிகழ்வில் துருக்கி கவுன்சிலர் Ms. Merve Gozde Otlu கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைப்பார்.
இதன் போது ஐந்து பிரிவுகள் உள்ளடக்கிய நேரடி போட்டிகளும் இடம்பெறவுள்ளன. இதில் நாடளாவிய ரீதியிலிருந்து 70 இற்கும் மேறபட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 200 இற்கும் மேற்பட்ட காட்சி கூடங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள அதேவேளை,சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை பொதுமக்களுக்காக பார்வையிட முடியும்.
இரண்டாம் நாள் நிகழ்வில் வருடாந்த பரிசளிப்பு விழா இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் Semih Lutfu Turgut மற்றும் துருக்கி கவுன்சிலர் Ms. Merve Gozde Otlu கலந்து கொள்ளவுள்னர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் விரிவுரையாளர் பேராசிரியர் இந்தியானா நாணாயக்கார விசேட பேச்சாளராகவும் விசேட அதிதியாக மௌலானா அஸ்ஸெய்யித் தங்கள் காதிரி கலன்டர் இந்தியாவிலிருந்தும் வருகை தரவுள்ளார்.
இம்முறை 175 இளைஞர் யுவதிகள் பயிற்சிகளை நிறைவு செய்து பட்டம் பெறும் அதேவேளை,2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிலிக்கா நிறுவனம் இதுவரை 13 ஆயிரத்து 700 இற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழிற் கல்வி டிப்ளோமா மற்றும் சுற்றுலா விருந்தோம்பல் பட்டப்படிப்புக்களை வழங்;கி வருகின்றமை விசேட அம்சமாகும்.
0 comments :
Post a Comment