ஆறாம் வகுப்பிலிருந்து O/L, A/L வரை கல்முனை சாகிராவில் கல்வி கற்று இன்று பல துறைகளிலும் உயர்ந்த நிலையில் உள்ள இவர்களின் வருடாந்த கலகலப்பான ஒன்றுகூடலாக இது இருந்தது.
இந்த நிகழ்வு ஒவ்வொரு வருடமும் கடந்தகால பாடசாலை நாட்களை மீட்டிப் பார்க்கும் தனது நட்புகளை உரசிப்பார்க்கும் தினங்களாக கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் இவ்வருடமும் அவர்களது நட்புகள் வட்டம் சங்கமித்த இன்றைய தினமும் ஆடல் பாடலுடன் இடம்பெற்றதுடன் பல்வேறு காத்திரமான முடிவுகளும் எட்டப்பட்டன.
நிகழ்வின்போது எம்.எம். ஜெஸ்மினினால் 2025 ஆம் ஆண்டுக்கான கலண்டர் தினக்குறிப்பு ஏடு மற்றும் 90/93 ஞாபக சின்னம் உள்ளிட்ட பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
சஹீரியன்ஸ் 90/93 நட்புகள் சங்கமித்த இவ் அமைப்பின் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய செயற்பாட்டு குழுவும் நட்பு வட்டங்களால் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில் இந்த நட்பு வட்டத்தின் தலைவராக யூ.எல்.எம். அலீம், செயலாளராக சி.எம்.ஏ. முனாஸ், பொருளாளராக எம்.எம். ஜெஸ்மின் ஆகியோருடன் குழு அங்கத்தினர்களாக ஏ. சபாத்துல்லாஹ், ஏ.எச்.எம். கியாஸ், கே.எம். முஸம்மில், நௌபர் ஏ. பாவா, றியாத் ஏ. மஜீத் மற்றும் ஏ. ஆப்தீன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
0 comments :
Post a Comment