சமூக அபிவிருத்தி அமையம், குடிநீர் வழங்க நடவடிக்கை.



பென்கல் புயல் நிலையை அடுத்து இலங்கையின் தென்கிழக்கு பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் குடிநீர் வழங்கும் திட்டமொன்றை சமூக அபிவிருத்தி அமையம் முன்னெடுத்து வருகின்றது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர்வழங்கல் குழாயில், வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பினால் காரைதீவு, நிந்தவூர் மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களுக்கான குடிநீர் வழங்கல் கடந்த பல தினங்களாக பாதிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை, காரைதீவு பிரதேச செயலகம் என்பன இணைந்து காரைதீவு மற்றும் மாளிகைக்காடு பிரதேச மக்களுக்கு புவுசர்கள் மூலமாக குடிநீர் வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தது. இச்செயற்பாடுகளை மேலும் இலகுபடுத்தி மக்களுக்கு பாதுகாப்பான தூய குடிநீரை வழங்கும் பொருட்டு சமூக அபிவிருத்தி அமையம் குடிநீர் வழங்கல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதனடிப்படையில், பிரதேச செயலகத்தின் உதவியுடன் காரைதீவு பிரதேச செயலத்திற்குட்பட்ட 10 இடங்களில் பாதுகாப்பான குடிநீர் தாங்கிகளை வைத்து, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பவுசர் மூலம் குடிநீர் வினியோக நடவடிக்கையை தொடர்ச்சியாக செயற்படுத்தி, கண்காணித்து வருகின்றது.

மேலும், காரைதீவு பிரதேச செயலகம், காரைதீவு பிரதேச வைத்தியசாலை, காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியவற்றிலும் நீர் தாங்கிகள் வைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.

தற்போது நிலவும் வெள்ள அனர்த்த சூழலில், இக்குடிநீர் வழங்கல் மூலம் சுமார் 1500 குடும்பங்கள் நன்மையடைகின்றன.

இச்செயற்பாடுகள் யாவும் காரைதீவு பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் கீழ், உதவிப் பிரதேச செயலாளர், கிராம நிலதாரிகள் மற்றும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தரின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்று வருகின்றது.

இக்குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு காரைதீவு பிரதேச சபையின் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருவதுடன், சாய்ந்தமருது நண்பர்கள் வட்டத்தின் இளைஞர்கள் பங்களிப்புச் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :