மாவடிப்பள்ளி அனர்த்தத்தில் உயிர் நீர்த்த உறவுகளுக்கான சர்வமத பிரார்த்தனை


பாறுக் ஷிஹான்-


மாவடிப்பள்ளி வெள்ள அனர்த்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கான சர்வமத ஆத்ம சாந்தி பிரார்த்தனை ஞாயிற்றுக்கிழமை(8) மாலை காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய முச்சந்தியில் தலைவர் சிவஸ்ரீ க.வி.பிரமீன் தலைமையில் நடைபெற்றது.

கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் சர்வ மத மதகுருமார்கள், அம்பாறை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா , அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவர்த்தன, மேலதிக அரசாங்க அதிபர் சிவ ஜெகராஜன் , கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜீ. சுகுணன், திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் , மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஜெயராஜ், முன்னாள் அரசாங்க அதிபர்கள், காரைதீவு பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரி உபுல் சாணக, ஆலய பரிபாலன சபையினர், இந்துமாமன்ற உறுப்பினர்கள், உலமா சபைகளின் நிர்வாகிகள், ராவணா அமைப்பினர், உயிர் நீத்த உறவுகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இனம், மதம், மொழிகளுக்கு அப்பால் மனிதநேயமும் அன்பும் உடையவர்களாக நல்லிணக்கத்தோடு எதிர்கால சந்ததியை கட்டியெழுப்புவதற்காக நடைபெற்ற நிகழ்வானது சர்வமத தலைவர்களின் பிரார்த்தனையோடு ஆரம்பமானது.

பின்னர் அதிதிகள் உரையை தொடர்ந்து அனைவரும் இணைந்து அகல் விளக்குகளில் தீபச்சுடரேந்தி அனர்த்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி அடையவும் எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறாமல் பாதுகாக்கவும் பிரார்த்தனைகள் இடம்பெற்றதோடு உயிர்களை காக்க களப்பணி செய்த வீரர்களும் நினைவு கூரப்பட்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :