இலங்கை வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து முஸ்லிம் தரும நம்பிக்கை நிதியத்திலிருந்து (MCF) தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் அனைவரையும் மீளாத்துயரில் ஆழ்த்திய மாவடிப்பள்ளி விபத்தில் மரணமடைந்த மத்ரஸா மாணவர்களின் குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
அண்மையில் நாட்டில் ஏற்பட்டுள்ள மிகப் பெரும் வெள்ள அனர்த்தத்தின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன்,
பல உயிர்களும் காவு கொள்ளப்பட்டன.
குறிப்பாக, மாவடிப்பள்ளி விபத்தில் உயிர் இழந்த மத்ரஸா மாணவர்களின் மரணமானது, முழு நாட்டு மக்களையுமே மீளாத்துயரில் ஆழ்த்தியது.
இவ்வாறான இள வயது மரணங்கள் என்பது பெற்றோர்களையும் உறவினர்களையும் மிகவும் கவலைக்குட்படுத்தக் கூடிய விடயமாக மாறியுள்ளதனால் அவர்களுக்கு இவ் இழப்பின் வலியை தாங்குகின்ற மன தைரியத்தை இறைவன் கொடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த அனைவருக்கும் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுவனம் கிடைக்க வேண்டுமென்றும் அதற்காக பிரார்த்தனை செய்யுமாறும் திணைக்களம் வேண்டிக் கொள்கின்றது.
அத்தோடு, இவ்விபத்தில் பாதிக்கப்பட்டு மரணமடைந்த 6 மத்ரஸா மாணவர்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.நவாஸ் அவர்களது பரிந்துரையில் இலங்கை வக்ப் சபையும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து முஸ்லிம் தர்ம நிதி (Muslim Charities Fund) லிருந்து ஆறு லட்சம் ரூபாவை தலா ஒரு லட்சம் வீதம் மரணமடைந்த மத்ரஸா மாணவர்களின் பெற்றோர்களிடம் காசோலைகளாக இன்று ஞாயிற்றுக்கிழமை (08) வழங்கி வைக்கப்பட்டன.
இதனை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சம்மாந்துறை பிரதேச செயலகத்தினூடாக வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஐ. பிர்னாஸ், சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் யூ.எம். அஸ்லம், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கணக்காளர் ௭ஸ்.௭ல்.எம். நிப்றாஸ், மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கொழும்பு மாவட்டத்துக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம். மஸீன் உட்பட சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment