பொலிவேரியன் மக்களுக்கு பவுசர் மூலம் குடிநீர் விநியோகம்



அஸ்லம் எஸ்.மெளலானா-
வெள்ள அனர்த்தம் காரணமாக குடிநீர் விநியோகம் தடைப்பட்டிருந்த நிலையில் சாய்ந்தமருது, பொலிவேரியன் கிராமத்திலுள்ள மக்களுக்கு கல்முனை மாநகர சபையினால் விசேட பவுசர் மூலம் வீட்டுக்கு வீடு வீடு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவின் துரித முயற்சியினால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வெள்ள அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பொலிவேரியன் கிராமத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (01) விஜயம் செய்த அவர் அப்பகுதி மக்களை சந்தித்து அவர்களது அவசர தேவைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் முற்றாக தடைப்பட்டிருப்பதால் தாம் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதாக குறிப்பிட்ட மக்கள் அதற்குரிய ஏற்பாட்டை உடனடியாக செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களுடன் தொடர்பு கொண்ட ஆதம்பாவா எம்.பி, இப்பிரச்சினை குறித்து கலந்துரையாடியதுடன் அவர்களது ஆலோசனையின் பிரகாரம் அம்பாறை மாவட்ட செயலகத்துடன் உடனடியாக தொடர்பு கொண்டு - தண்ணீர் பவுசர் ஒன்ற வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அவரது கோரிக்கைக்கு அமைவாக கிடைக்கப் பெற்ற தண்ணீர் பவுசரை பொறுப்பேற்ற கல்முனை மாநகர சபை துரிதமாக சொற்பட்டு பொலிவேரியன் கிராமத்திலுள்ள மக்களுக்கு அந்த பவுசர் மூலம் வீட்டுக்கு வீடு குடிநீர் விநியோகம் செய்து வருகின்றது.

கல்முனை மாநகர ஆணையாளரின் அறிவுறுத்தலின் பேரில் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜெளசி மற்றும் பிரதேச செயலாளர் ஏ.எம். ஆஷிக் ஆகியோரின் கண்காணிப்பில் இப்பணி முன்னெடுக்கப்படுகிறது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :