கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்-
நேற்றைய தினம் (30) கம்பஹா மாவட்டம், கஹட்டோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தான் தெரிவித்த கருத்தொன்று தொடர்பில் செய்தி இணையம் ஒன்றில் திரிபுபடுத்தி எழுதப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் அஷ்ஷெய்க் முனீர் முளப்பர் தெரிவித்தார்.
அவர் அங்கு தெரிவித்த விடயம், "என்னை ரவூப் ஹக்கீம் போலவோ, ரிசாத் பதியுதீன் போலவோ, முன்னாள் அமைச்சர் ஹலீம் போலவோ பார்க்காது கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவே பாருங்கள். நான் அவர்களைப் போன்று நடந்து கொள்ள மாட்டேன்" என்பதாகும்.
ஆனால் அதனை திரிபுபடுத்தி ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுத்தீன் போன்று "இனவாதமாக" நடந்து கொள்ள மாட்டேன் என்று அவர் தெரிவித்ததாக குறித்த இணையத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்ததுடன், அது தொடர்பில் குறித்த இணையத்திற்கு தெளிவுபடுத்தியதனையடுத்து அதனை திருத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
உண்மை நிலவரம் என்னவெனில் நிகழ்வு தொடர்பில் Kahatowita news page Official முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்தியை பிழையாக மீள் எழுதி தலைப்பிட்டுள்ளனர்.
"நான் தெரிவித்த விடயம் ஹக்கீம், ரிஷாத் ஆகியோர் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை அதிகமாக பெற்று பாராளுமன்றம் தெரிவானவர்கள். ஆனால் நான் பெரும்பான்மை மக்களின் வாக்குகளையும் அதிகமாக பெற்று பாராளுமன்றம் சென்றிருக்கிறேன். அதனால் அவர்கள் போன்று என்னால் குறித்த ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக செயற்பட முடியாது. வாக்களித்த கம்பஹா மாவட்ட (சகல இன) மக்களின் பிரதிநிதியாகவே நான் செயற்படுவேன் என்ற அர்த்தத்தில் தான் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
முக்கிய விடயம் என்னவெனில பெரும்பாலானோர் செய்திகளின் தலைப்புகளை பார்த்துவிட்டு ரியாக்ஷன், பின்னூட்டம் அல்லது பகிர்வு செய்து கடந்து விடும் நிலைதான் இருக்கிறது.
ஊடகங்களை நடாத்துவோர் இது தொடர்பில் அவதானத்துடனும், பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.
0 comments :
Post a Comment