கூட்டணி அரசாங்கங்களில் அங்கம் வகித்த முஸ்லிம் கட்சிகளின் தலைமைகளுக்கு மாத்திரமா அமைச்சுப் பதவிகள் இலங்கையில் வழங்கப்பட்டு வந்திருக்கின்றன?
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1931 யில் Donoughmore Constitution யின் கீழான State Council of Ceylon யின் முதலாவது Board of Ministers யில், Sir Macan Markar அவர்கள் தகவல் தொடர்பு மற்றும் பணிகள் அமைச்சராக இருந்திருக்கிரார்.
சுதந்திர இலங்கைக்கு பின்பு முஸ்லிம் கட்சிகளின் கூட்டணிகள் இல்லாமல் ஆட்சி அமைத்த அரசாங்கங்களில் கூட தொழில்துறை, நிதி, நீதி, கல்வி, உள் நாட்டு, வெளியுறவு, வீடமைப்பு, வர்த்தக கப்பல்துறை போன்ற பல முக்கிய பொறுப்பு வாய்ந்த அமைச்சுப் பதவிகளில் முஸ்லிம்கள் முழு அமைச்சர்களாக பதவி வகித்து இலங்கையில் மட்டுமல்லாது சர்வதேச சரித்திரங்களிலும் இடம் பெற்று இருக்கின்றனர்.
அப்படிப்பட்ட நீண்டதொரு வரலாறு இலங்கை அரசியலில் எங்களுக்கு இருக்கும் போது, தற்போதைய அனுர ஆட்சியில்,
5 வருடத்தில் எப்போதாவது மாற்றங்கள் வரலாம் . . . ??? அப்போது அதில் முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படலாம் . . . ??? அது வரை நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு முஸ்லிம் சமூகம் பொறுமையாக காத்திருக்க வேண்டுமாம் . . . எங்கள் ஊரிலே கூறுவார்கள் - நல்ல கதை ஆனால் நெடுப்பம் காணா என்று. அப்படித் தான் உள்ளது இந்தக் கதையும்.
எமது வரலாறு தெரியாமல் இந்த ஆட்சியில் அங்கம் வகிக்கும் இவர்களே இவ்வாறான அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தால் . . . . .
உண்மையிலேயே முஸ்லிம் சமூகத்தில் “தொழில்சார் நிபுணத்துவர்கள்” எந்த துறையிலும் இல்லை என்பதை அனுர அரசு ஊர்ஜிதம் செய்து விடும்.
எங்களுக்கு அநீதி நடந்தால் மாத்திரம் இன, மத, மொழி கலாச்சாரம் பார்க்க கூடாது . . பார்த்தால் இனவாதம் பேசுகிறோம்.
ஒரு நாட்டின் சிறுபன்மை இனம், தனது இருப்பின் உரிமையை நிலை நாட்ட முற்படுவது இனவாதம் அல்ல. அப்படி நினைத்தால் அது அவர்களின் அறியாமை, முட்டாள்தனம்.
பிரித்தனியாவின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இலங்கை இருந்த போது கூட எம் இனத்தின் தனித்துவத்திற்காக போராடியவர்கள் அறிஞர் சித்திலெப்பே, வாப்பாச்சி மரைக்கார் போன்றவர்கள். அதை எல்லாம் பொய்யாக்கி வீணாக்கி விடாதீர்கள்!
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி முஸ்லிம் சமூகத்துக்கு
வழங்கப்படாதது குறித்து முஸ்லிம் சமூகம் வருந்தத் தேவையில்லை. அமைச்சுப் பதவிகளில்
மாற்றங்கள் ஏற்படலாம். அரசின் 5 வருட
காலப்பகுதியில் முஸ்லிம் ஒருவர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி பெறுவதற்கான
வாய்ப்புகள் உள்ளன என்கிறார் தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்..
முஸ்லிம் சமூகத்தைச்சேர்ந்த ஒருவர் அமைச்சரவையில் இருக்க
வேண்டும் என்பது முஸ்லிம் சமூகத்தினது விருப்பமாக இருந்திருக்கின்றது.
சுதந்திரத்தின் பின்னரான முதலாவது அமைச்சரவையிலிருந்து
முஸ்லிம் பிரதிநிதியொருவர் அமைச்சவையில் அங்கம் வகித்திருக்கிறார். அதுவொரு சமூக
மனநிலை. அரசாங்கம் ஒரு கூட்டணி அரசாக அமைகின்ற போது அதில் அங்கம் வகிக்கின்ற
முஸ்லிம் கட்சிகள் தமக்கான அமைச்சுப் பதவிகளைக் கோரியே அதரவு வழங்குவர்.
அவர்களுக்கு தாம் பிதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சியின்
தலைவர் என்ற அடிப்படையில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவதுண்டு. தேசிய மக்கள்
சக்தி இவ்விடயத்தில் தனது நிலைப்பாட்டைத் தௌிவாகக் கொண்டிருக்கின்றது, துறைசார்ந்து
திறமையானவர்கள் எந்த மதத்தவராயினும், இனத்தவராயினும்
தேசிய மக்கள் சக்தி அதன் அமைச்சரவையில் அவர்களை உள்ளீரக்கும். அப்படியாயின்
முஸ்லிம் சமூகத்தில் பொருத்தமானவர்கள் இல்லையா? என்ற
கேள்வி எழலாம்.
ஆனால் அதில் முஸ்லிம், தமிழ்
என்ற வேறுபாடு பாராமல் மக்களுக்கு பணியாற்ற துறைசார்ந்த சிறந்தவர் என்பதே
பொருத்தமானதாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்.
அதுமாத்திரமல்ல அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு என்பதும் 05 வருடங்களுக்கும்
ஒரேமாதிரியானதாவும் இருக்காது.
இடையில் மாற்றங்கள் வரலாம். அதில் முஸ்லிம் ஒருவர்
அமைச்சராககூட நியமிக்கப்படலாம். எனவே முஸ்லிம் சமூகம் பொறுமை காக்க வேண்டும்.
அரசாங்கம் முழு இலங்கைக்காகவும் அர்ப்பணிப்போடு
செயற்படுகையில் அதற்கு இன, மதம் பேதம் பாராது ஆதரவு
வழங்க வேண்டும். மாறாக அரசு இன ரீதியாக, மொழி
ரீதியாக அடக்க முற்பட்டால் அதனை எதிர்ப்பதில் தவறில்லை என்கிறார் பிரதி அமைச்சர்
முனீர் முழப்பர்.
0 comments :
Post a Comment