பல்கலைக்கழக பீடங்களின் பெயர்கள் மாற்றம்- பிரதமர் ஹரினியின் அதிரடி நடவடிக்கை



பிரதமர் ஹரினி அமரசூரியவினால் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் ,கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாளி வளாகம் மற்றும் மொறட்டுவ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பீடங்கள் மற்றும் துறைகளின் பெயர்கள் மாற்றப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 1978 ஆம்‌ ஆண்டின்‌ 16 ஆம்‌ இலக்க, பல்கலைக்கழகங்கள்‌ சட்டத்தின்‌ 21 ஆம்‌ பிரிவுடன்‌ சேர்த்து வாசிக்கப்படும்‌ 27(1) என்னும்‌ பிரிவினால்‌ பல்கலைக்கழக மானியங்கள்‌ ஆணைக்குழுவின்‌ விதப்புரையின்‌ பேரில் இலங்கை கிழக்குப்‌ பல்கலைக்கழகத்தின் அட்டவணையின்‌ நிரல்‌ 1
இல்‌ காணப்படுகின்ற “வணிகம்‌ மற்றும்‌ முகாமைத்துவப்‌ பீடம்‌” என்னும்‌ விடயத்திற்கு நேரொத்ததாகவுள்ள நிரல்‌ 11 இல்‌ காணப்படுகின்ற முகாமைத்துவத்‌ துறையானது, கணக்கியல்‌ மற்றும்‌ நிதித்‌ துறை என பெயர் மாற்றம் பெற்றுள்ளது.
மேலும், இலங்கை கொழும்பு பல்கலைக்கழகத்தின்‌ ஸ்ரீபாளி வளாகத்தின்‌ அட்டவணையின்‌ நிரல்‌ 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள பீடம் வெகுசன ஊடக பீடம்‌ எனவும், நிரல்‌ 11 இல் குறிப்பிடப்பட்டுள்ள துறைகள் வெகுசன ஊடகத்துறை, மொழிகள்‌ துறை, கணினிக்‌ கற்கைகள்‌ துறை அரங்கேற்றக்‌ கலைத்துறை எனவும் பெயர் மாற்றம் பெற்றுள்ளது.
அத்தோடு, இலங்கை மொறட்டுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் நிரல்‌ 11 இல் காணப்படும் சமூக மருத்துவம்‌ மற்றும்‌ குடும்ப மருத்துவ திணைக்களம் என்பதற்கு பதிலாக பொதுச்‌ சுகாதாரம்‌ மற்றும்‌ குடும்ப மருத்துவ திணைக்களம்‌ எனவும் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :