கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் ஒரு இனத்தையும் மதத்தையும் இலக்கு வைத்து கோட்டாபய ராஜபக்க்ஷ அரசாங்கம் நடந்து கொண்டதால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீட்டை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருப்பதை ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் பெரிதும் வரவேற்கிறது.
இது பற்றி ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முஸ்னத் முபாறக் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
கோட்டாபய ராஜபக்க்ஷ அரசாங்கம் உலக சுகாதார அமைப்பு வழங்கிய வழிகாட்டுதல்களையும் மீறி முஸ்லிம்ககின் மரணித்த உடல்களை எரிப்பதில் இனவாதமாக செயற்பட்டது என்பது உண்மை.
இத்தகைய, உரிமைகள் மீறப்பட்ட இஸ்லாமிய சமூகத்தினருக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
அந்த வகையில் பாரிய உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்ற சஜித் பிரேமதாசவின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்று நடை முறைப்படுத்த வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment