நிந்தவூர் ஆயுள்வேத ஆராய்ச்சி நிலையத்தின் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும்; ஆதம்பாவா எம்.பி தெரிவிப்பு



அஸ்லம் எஸ்.மெளலானா-
நிந்தவூரில் அமைந்துள்ள பிராந்திய ஆயுள்வேத வைத்திய ஆராய்ச்சி நிலையத்தில் நிலவி வருகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா தெரிவித்துள்ளார்.

மேற்படி ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று நேற்று செவ்வாயன்று (10) அங்கு விஜயம் செய்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இந்த ஆயுர்வேத ஆராய்ச்சி நிலையத்தில் நிலவும் குறைபாடுகளை நேரடியாக கண்டறிந்து கொண்ட அவர் நிலைய உத்தியோகத்தர்களுடனும் கலந்துரையாடினார்.

இங்கு நிரந்தர வைத்திய அதிகாரிகள் எவருமின்றி பதில் வைத்திய அதிகாரிகள் இருவரே கடமையாற்றுவதாகவும் போதிய ஆளணியினர் இல்லை எனவும் பெளதீக வளப் பற்றாக்குறைகள் நிலவுவதாகவும் அவரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன் தனியார் கட்டிடத்திலேயே இது இயங்கி வருவதால் இதனை அம்பாறைக்கு கொண்டு செல்வதற்கான முஸ்தீபுகள் இடம்பெறுவதாகவும் கூறப்பட்டது.
அதேவேளை குறித்த கட்டிடம் மிகவும் வெப்பமான சூழலைக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வைத்திய நிலையத்தில் நிலவும் மேற்படி குறைபாடுகளினால் மக்களுக்கு திருப்திகரமான சேவைகளை வழங்க முடியாதிருப்பதாகவும் இவற்றை துரிதமாக நிவர்த்தி செய்வதற்கு அவசர நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.
நிந்தவூரில் அரச கட்டிடம் ஒன்றை அடையாளப்படுத்தி இந்த நிலையத்தை அங்கு இடமாற்றும் வரை அல்லது நிரந்தர கட்டிடம் அமைக்கப்படும் வரை இதனை அம்பாறைக்கோ வேறு பகுதிகளுக்கோ கொண்டு செல்வதற்கு இடமளிக்காமல் தொடர்ந்தும் இங்கேயே இயங்குவதற்கு தான் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா அவர்கள் நிரந்தர வைத்திய அதிகாரிகளை நியமிப்பதற்கும் ஆளணி விடயம் தொடர்பிலும் பெளதீக வளத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காகவும் தன்னால் முடியுமான நடவடிக்கைகளை எடுத்து உதவுவதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :