நூலகர் எம்.எம். றிபாவுடீனின் பசுமையுடன் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் மற்றும் கௌரவ அதிதிகளாக பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் நூலகர் எம்.எம். றிபாவுடீன் ஆகியோர் கலந்துகொடிருன்தனர்.
இந்த நிகழ்வு காய்கறி பயிர்கள், உலர் வலைய பழ வகை தாவரங்கள் மற்றும் அலங்கார செடிகளின் அழகிய ஒருங்கிணைப்பை கொண்டாடும் வகையில் வெகுவாக அமைக்கப்பட்டு இருந்தது. செயல் எண் LIB 36 என்ற திட்டத்தின் அடிப்படையில், நிலையான பசுமை நூலகக் கருத்தை முன்னிறுத்தி நூலக சேவைகளை மேம்படுத்தும் சிறந்த முன்னுதாரணமாக நிகழ்வு அமைந்தது.
நிகழ்வின் சிறப்பம்சங்கள்:
🌱 பல்வேறு வண்ணங்களில் காய்கள், பூக்கள் மற்றும் இலைகளுடன் துளிர்விட்ட காய்கறி செடிகள்.
🌸 ப்ரிஜோல் ஹில்லியின் பசுமைச்சூழலும் மல்லிகைப்பூக்களின் மனம்விசுக்கும் மணமும் நிகழ்விற்கு தனித்துவமான அழகையும் உயிர்த்துடிப்பையும் சேர்த்தது.
நிகழ்வின் வெற்றிக்கு ஐ.எல். ரஹ்மதுல்லா மற்றும் ஹனிபா ஆகியோரின் அர்ப்பணிப்பு முயற்சிகள் மிக முக்கிய பங்காற்றியது.
பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் உள்ளிட்ட குழுவினர் நூலக சூழலை பார்வையிட்டதுடன் எதிர்காலத்தில் நூலக பணிகளை பசுமை சூழலிலும் விரிவுபடுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment