சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர். சோமரத்ன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகர் எம் எம் றிபாயூத்தீன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
விஷேட அதிதிகளாக சிரேஷ்ட உதவி நூலகர் எம் சி எம் அஸ்வர், சிரேஷ்ட உதவி நூலகர் கலாநிதி எம் எம் மஸ்ரூபா, ஏ ஏ எம் நஃபீஸ், எஸ். எல்.எம் சஜீர் ஆகியோரும் அதிதிகளாக தகவல் தொழில்நுட்ப வலை அமைப்பு அஸ்லாம் சஜித் மற்றும் நூலக உதவியாளர் சி எம் ஏ முனாஸ் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வின் வரவேற்புரையை பல்கலைக்கழக நூலக பிரதிநிதி ஏ சி எம் முபாரக் நிகழ்த்தினார். நிகழ்வுக்கு இலங்கை உள்ள 17 பல்கலைக்கழகங்களில் இருந்தும் ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தனர். நூலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் பலர் அரச சேவையிலிருந்து பணியாற்றி ஓய்வு பெறுவதற்கான கௌரவமும் விருந்தும் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
இதன் இரண்டாவது அமர்வில் 2024 /2025 ஆண்டுக்கான புதிய நிர்வாக தேர்வில் உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இதில்
தலைவர் எஸ் ஆர் சோமராத்தன கொழும்பு பல்கலைக்கழகம் .
செயலாளர் அசித்த குமார பேராதனை பல்கலைக்கழகம்
பொருளாளர் டி எஸ் ஆர் திசாநாயக்க ராஜரட்ட பல்கலைக்கழகம்
உப தலைவர் ஈ எல் ஏ சுபியான் தென்கிழக்கு பல்கலைக்கழகம்
ஆலோசகர் ஆர் எம் தம்பவித்த ரஜரட்டை பல்கலைக்கழகம்
ஆலோசகர் றசாக் முஹம்மத் அலி தென்கிழக்கு பல்கலைக்கழகம்
ஒருங்கிணைப்பாளர் எம் பிரியந்த றுகுணு பல்கலைக்கழகம்
ஏனைய ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்குமான இணைப்பு உதவி செயலாளர்களும் தெரிவு செய்யப்பட்டனர்
1 சி ஸ்ரீதரன் பேராதனை
பல்கலைக்கழகம்
2 ஏ சி எம் முபாரக்
தென்கிழக்கு
பல்கலைக்கழகம்
3 உப்புள் பிரியந்த
மெறட்டுவை
பல்கலைக்கழகம்
4 நிமால் குணத்திலக்க
சப்றகமுவ
பல்கலைக்கழகம்
5 சத்துரங்க அபேசேகர
றஜறட்ட பல்கலைக்கழகம்
6 எம் திசாநாயக்க
வயம்ப பல்கலைக்கழகம்
7 எல் சி ஜயானாத்
றுஹுனு பல்கலைக்கழகம்
8 என் விஜயசூரிய
களனி பல்கலைக்கழகம்
9 நிசாந்த திறந்த பல்கலைக்கழகம். ஆகியோர் தெரிவாகினர்.
0 comments :
Post a Comment