உபதேச குழுக்களின் மூலம் பொலிசார் பொதுமக்கள் நல்லுறுவு மேலும் வலுப்பெறும்! காரைதீவில் உதவிபொலிஸ் அத்தியட்சகர் பண்டார .



வி.ரி.சகாதேவராஜா-
முகத்தில் அவ்வப்போது எழும் குற்றச்செயல்களை தடுக்க பொலிசார் பொதுமக்கள் நல்லுறுவு அவசியம். அதற்கு இவ்வாறான உபதேசக்குழுக்கள் மேலும் வலுச்சேர்க்கும் என்பது எனது நம்பிக்கை.

இவ்வாறு காரைதீவில் நடைபெற்ற மக்கள் பாதுகாப்பு உபதேசக்குழுவின் கூட்டத்தில் பேசிய அக்கரைப்பற்று அம்பாறை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி. பண்டார தெரிவித்தார்.
காரைதீவுப்பொலீஸ் பிரதேசத்திற்கான மக்கள் பாதுகாப்பு உபதேசக்குழுவின் கூட்டம் நேற்று (26) வியாழக்கிழமை மாலை காரைதீவு பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.எஸ்.ஜகத் தலைமையில் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.

அங்கு பண்டார மேலும் கூறுகையில்:
மக்கள் சுதந்திரமாக நிம்மதியாக பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதற்காக பொலிசார் சேவையாற்றிவருகின்றனர். இருப்பினும் பொதுமக்களின் ஒத்துழைப்பில்லாமல் அது 100வீதம் சாத்தியமாகாது. எனவே பொதுமக்கள் பொலிசார் உறவு முக்கியானது.
போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு பொதுமக்களின் உதவி கட்டாயம் தேவை.

உபதேச குழுவின் வகிபாகம் பாரியது. அதன் அதிகாரம் வரையறையற்றது. முழுப் பொலிஸ் நிலையத்தையே கண்காணிக்கலாம்.
நான் திருக்கோவிலில் இருந்தபோது அங்குள்ள உபதேச குழுவே என்னை காப்பாற்றியது.
சட்ட விரோத செயற்பாடுகளையும் போதைப் பொருள் கடத்தலை யும் காரைதீவு பிரதேசத்தில் முற்றாக தடை செய்யவேண்டும்.
தங்கள் உயிர்ப்பாதுகாப்பில் பொலிசாருக்கும் பங்குண்டு என்ற கடமைஉணர்வில் அதனைச்செய்கிறோம். பொதுமக்கள் ஒத்துழைக்கவேண்டும்.
பொது மக்களின் ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்க்கிறோம். இந்த உபதேசக்குழு உறுப்பினர்களை நான் தொடர்ந்து காணவிரும்புகிறேன். என்றார்.
பொலிஸ் கான்ஸ்டபிள் எஸ்.நாகேஸ்வரன் மொழிபெயர்ப்பு செய்தார்.
உபதேசக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :