ஜனாதிபதி நிதியத்தில் இருந்து சிறுநீரக சத்திர சிகிச்சைக்கு பணம் பெற்றது குற்றமெனில் என்னை தூக்கிலிடுங்கள்!! முன்னாள் இராஜாங்க அமைச்சர். விமலவீர திசாநாயக்கா.



- முகம்மட் முக்தார்.
னது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு ஜனாதிபதி நிதியத்தில்இருந்து_பணம் பெற்றது மன்னிக்க முடியாத தவறு என்றால்_என்னை தூக்கிலிடுங்கள் இவ்வாறு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
விமவவீர திசாநாயக்கவின் பெயரில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முப்பது இலட்சம் ரூபா விடுவிக்கப்பட்டமை தொடர்பில் வெளியான செய்திகள் தொடர்பிலேயே மேற்கண்டவாறு அவர் வேதனையுடன் கூறினார்.

தனக்கு மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக சத்திரசிகிச்சை காரணமாக ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணத்தினை தான் பெற்றுக்கொண்டது உண்மை அதனை நான் ஒரு போதும் மறைக்க தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
என்னைப் போன்ற அரசியல் ஏழை ஒருவர் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்யவே ஜனாதிபதி நிதியில் இருந்து 30 லட்சம் எடுத்தேன். தவிர, அந்த முப்பது லட்சமும் எனது வங்கிக் கணக்கிலோ அல்லது எனது குடும்பத்தினரின் வங்கிக் கணக்கிலோ வரவு வைக்கப்படவில்லை.

எனது சிறுநீரக சத்திரசிகிச்சை செய்த வத்தளை தனியார் வைத்தியசாலைக்கு தான் அந்தப் பணம் நேரடியாக ஜனாதிபதி செயலகத்தால் செலுத்தப்பட்டது.இந்த முப்பது லட்சத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்பதும் எவருக்கும் தெரியும்.
கடைசியாக, அறுவை சிகிச்சை முடிந்து மூன்று மாதங்கள் மருத்துவமனையில் இருந்தபோது, ​​மருத்துவமனை கட்டணம் மட்டும் 110 மில்லியன் ரூபாவாகும். இதனைஎனது காரை விற்றதன் மூலம் அந்தக் கட்டணத்தைக் வைத்தியசாலைக்கு செலுத்தினேன்.

நான் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பெற்ற காசுக்காக எல்லாரும் கூச்சல் போடுகிறார்கள். ஆனால் நான் தலையிட்டு எத்தனை நோயாளர்களுக்கு ஜனாதிபதி நிதியில் இருந்து பணம் பெற்றுக்கொடுத்துள்ளேன்.
நான் பாராளுமன்ற உறுப்பினராக வந்து ஒரு மோசடியை கூட செய்தவன் அல்ல. குறைந்த பட்சம் ஒரு கொசுவை கூட நான் கொல்லவில்லை.
அப்படிப்பட்ட எனக்கு இப்படி பணத்தை நோய்க்காக கொடுப்பது ஒரு கிரிமினல் குற்றம் என்றால், என்னை மக்களின் முன் தூக்கிலிடுங்கள் என்றார் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :