இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற இரத்த தான முகாம்.



நிப்ராஸ் லத்தீப் / நூருல் ஹுதா உமர்-
ல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் அதன் தஃவா குழுவின் ஏற்பாட்டில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக நடைபெற்ற இரத்த தான முகாம் இன்று (21) கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிகழும் குருதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக கல்முனை ஹுதா அழைப்பு வழிகாட்டல் பணியகம் ஒவ்வொரு வருடமும் இந்த இரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது.

இன்றைய நிகழ்வில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஸாரா ஷராப்தீன், கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் எம்.ரம்சீன் பக்கீர், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்தியர் குழாம், தாதிகள், உத்தியோகத்தர்கள், கிராம நிலதாரி, கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகிகள் எனப்பலரும் கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :