காரைதீவு பிரதான வீதியில் ஆறடி அடையாள தூண்கள்!

வி.ரி. சகாதேவராஜா-

காரைதீவு - அம்பாறை பிரதான வீதியில் அண்மையில் பெரு வெள்ளம் ஏற்பட்ட பாதையின் இருமருங்கிலும் ஆறடி உயர அடையாள தூண் நிருமாணிக்கப் பட்டுள்ளது.

காரைதீவு பிரதான வீதியில் அண்மையில் பெரு வெள்ள அனர்த்தம் இடம்பெற்று மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக இத் தூண்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்திற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் உட்பட ஏனைய தரப்பினரும் ஒத்துழைப்புகளை வழங்கினர்.

மேலும் எதிர்காலத்தில் இப்பகுதியில் ஏற்படும் வெள்ள நிலையின் அளவீட்டை இலகுவாக கணீப்பீடு செய்வதற்காகவும் அவ்வழியாக பயணம் செய்யும் பொதுமக்கள் வாகனங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவும் இத்தூண்கள் நிர்மாணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை எதிர்வரும் வாரங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





4 Attachments • Scanned by Gmail
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :