கல்முனை மாநகர சபையினால் மருதமுனையில் அமைக்கப்படும் சிறுவர் பூங்காவின் நிர்மாணப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்தப் பூங்காவை அமைக்கும் வேலைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படும் தகவல்களில் எவ்வித உண்மையுமில்லை எனவும் கல்முனை மாநகர சபை தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது;
இந்த சிறுவர் பூங்காவின் நடுவே ஊடறுத்து செல்லும் பாதையானது
எதிர்காலத்தில் சிறுவர்களுக்கு அபாயமாக அமையலாம் எனக் கருதப்படுவதால் ஏற்கனவே பாவனையில் இருந்த இப்பாதை ஊடாக - வாகனப் போக்குவரத்துகளை தடை செய்யும் வகையில் பாதையை மறித்து கட்டுமானம் செய்யப்படுகிறது.
எவ்வாறாயினும் இப்பாதையூடாக பாதசாரிகள் பயணிக்க முடியும் என்பதுடன் வாகனப் போக்குவரத்துக்காக சிறுவர் பூங்காவுக்கு மேற்குப் பக்கமாக ஸம் ஸம் வீதியில் இருந்து ஆரம்பித்து - மசூர் மெளலானா வீட்டுத் திட்டத்திற்கு செல்வதற்காக மசூர் மெளலானா வீதி வரை மாற்று வீதியொன்று ஏற்னவே அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், மருதமுனை சிறுவர் பூங்கா நிர்மாண வேலைகளை துரிதப்படுத்தி - விரைவாக நிறைவு செய்யுமாறு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரருக்கு
மாநகர ஆணையாளர் என்.எம். நெளபீஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த 03 வாரங்களுக்கு முன்னர் கல்முனை மாநகர ஆணையாளர் தலைமையில் அம்பாறை மாவட்ட பொறியியலாளர் உள்ளிட்ட மாவட்ட செயலக அதிகாரிகள் குழு மற்றும் கல்முனை பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர் மருதமுனை சிறுவர் பூங்கா அமைவிடத்தை பார்வையிட்டு - வரைபடத்திற்கு ஏற்றவாறு நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைவாக அதன் நிர்மாணப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்முனை மாநகர சபை மேலும் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment