ஹெல்ப் யூனிவர்சிட்டி (Help University) அனுசரணையில் மலேசியாவில் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி நடைபெறவுள்ள WORLD SCHOOL SUMMIT மாநாட்டில் VISIONARY LEADER AWARD ஐப் பெறும் இலங்கையராக மருதமுனையை சேர்ந்த அதிபர் அலியார் முஹம்மட் அன்ஸார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தரவுகள், வினாக்கள், விளக்கங்கள் என்பவற்றின் அடிப்படையில் இணையவழியில் தெரிவு செய்யப்பட்ட உலகின் 48 நாடுகளின் பிரதிநிதிகளில் ஒருவராக இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். .
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கமு/புலவர்மணி சரிபுத்தீன் மகா வித்தியாலயத்தின் அதிபரான முஹம்மட் அன்ஸார், 1992இல் இலங்கை ஆசிரியர் சேவையில் இணைந்து கொண்டதுடன் 1995இல் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன பகுதிநேர அறிவிப்பாளராகவும் தெரிவானார். 2012 முதல் இலங்கை அதிபர்கள் சேவைக்கு தெரிவுசெய்யப்பட்டார்.
இவர், கல்விமாணிப் பட்டத்தோடு பட்டப்பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா, மனிதவள அபிவிருத்தி முகாமைத்துவ டிப்ளோமா பட்டங்களையும் பெற்றுள்ளார்.
மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி யின் பிரதி அதிபராகவும் சாய்ந்தமருது ரியாழுல் ஜன்னா வித்தியாலயத்தின் அதிபராகவும் கடமையாற்றி உள்ளதோடு தான் கடமையாற்றிய பாடசாலைகளை வலயத்தில் பேசும் முதல் நிலைப் பாடசாலைகளாக மாற்றி கல்விச் சமூகத்தின் நன்மதிப்பை பெற்றவராவார்.
தொலைக்காட்சி, வானொலி அறிவிப்பாளராக நிகழ்ச்சிகள் படைத்து நேயர்களின் மனம் வென்ற அன்ஸார், ஆசிரியராக அதிபராக கடமை புரிந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என மக்களின் மனதை வென்று வருகிறார்.
மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான இவர், அலியார் - றாகிலும்மா தம்பதிகளின் புதல்வராவார்.மருதமுனை கல்விச் சமூகம் தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளன.
0 comments :
Post a Comment