காலம்சென்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ஏ.எல். அப்துல் மஜீத் அவர்களின் ஜனாஸா இன்று வெள்ளிக்கிழமை (20) சாய்ந்தமருது அக்பர் பள்ளி மையவாடியில் பெருந்திரளான மக்கள் பங்கேற்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இரங்கல் உரை நிகழ்த்தினார்.
அத்துடன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ்.எம். நளீம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், எம்.எஸ். தெளபீக் உட்பட அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், கல்வியியலாளர்கள், வர்த்தகர்கள் எனப் பலரும் ஜனாஸா நல்லடக்க நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment