வெள்ளத்தில் மூழ்கிய மதரஸா மாணவர்கள் விடயத்தில் நீதி கேட்பது யார்?



சீரற்ற காலநிலையால் அண்மையில் அம்பாறை மாவட்டம், காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்தருகில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உழவு இயந்திரத்தில் பயணித்த மாணவர்களின் மரணம் தொடர்பில் பல்வேறுபட்ட கதையாடல்கள், வாத பிரதிவாதங்களை சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது. நடந்த அசம்பாவிதத்திற்கு காரணமானவர்கள் யார் என்பதை இதுவரை கண்டுபிடிக்காமல் விபத்தில் பலியானவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கின்றோம் என்ற பெயரில் அப்பாவிகளை தண்டிக்கப்படக் கூடாது.
அந்த வகையில்....
வெள்ள நீர் பாய்ந்தோடிய காரைதீவு மாவடிப்பள்ளி பாதையால் பஸ் போக முடியாது ஆனால் உழவு மெசினில் செல்லலாம் என்று அனுமதித்த பாதுகாப்பு தரப்பினரை ஏன் கேள்வி கேட்கவில்லை?
வளத்தாப்பிட்டி குளத்தை எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி வெட்டி நீரை வெளியேற்றிய அதிகாரியை ஏன் கேள்வி கேட்கவில்லை?
அதன் காரணமாகவே சடுதியாக நீர்மட்டம் உயர்ந்தது என்பதே உண்மை. அதேநேரம் அந்த பாதையால் உழவு இயந்திரம் சென்று கொண்டிருந்தபோது மறுபக்கமிருந்து நேர் எதிராக இன்னொரு கனரக வாகனம் வந்ததனால் அதற்கு இடம்விட்டு ஒதுங்கியபோதுதான் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
அப்படியானால் எதிரே வந்த அந்த வாகனத்தை எதிரும் புதிருமாக செல்ல அனுமதித்தது யார்?
ஏன் அனுமதி கொடுக்கப்பட்டது என்ற கேள்வி ஏன் கேட்கபட வில்லை?
அந்த மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டபோது அங்கே நின்ற மௌலவி அவ்விடத்தில் கடமையில் நின்ற பாதுகாப்பு தரப்பிடம் உதவிகேட்டு மன்றாடியதாக கூறப்படுகின்றது.
அந்த இக்கட்டான நேரத்தில் உடனே உதவி வழங்கப்படாதது ஏன்?
அவ்விடத்தில் பயணத்தேவைக்காக பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து நின்றவர்கள் உடனடியாக செயல்பட்டு படகு ஒன்றைபா பயன்படுத்தி ஒருவரை மீட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
அப்படியானால் இதில் பாதுகாப்பு தரப்பினரின் பங்கு என்ன என்ற கேள்வி ஏன் கேட்கபடவில்லை.?
இப்படிப்பட்ட விடயங்களை மூடிமறைத்துவிட்டு வெறுமனே மதரசா நிர்வாகத்தை மட்டும் குறைசொல்ல முற்படுவது ஏன்?
இதற்கெல்லாம் விடை தேடுவதை விட்டுவிட்டு வேறு விடயங்களைப் பற்றி நாம் பேச நினைப்பதற்கு காரணம் என்ன?
இவற்றையெல்லாம் கேள்வியாக கேட்டால் நமக்கு பிரச்சினைவரும் என்று ஒவ்வொருவரும் ஒதுங்கி சென்றால் உண்மைகளை பேசுவது யார்?
இதனையெல்லாம் பேசவோ கேள்வி கேட்கவோ முற்படாத நாம் மதரசா மாணவர்களுக்கு நீச்சல் பயிட்சி ஏன் கொடுக்கவில்லை யென்று பட்டிமன்றம் நடத்துவதற்கு காரணம் என்ன?
அப்படியானால் வெள்ளப் பெருக்கு காலத்தில் அந்த பாதையை கடக்கின்ற பொதுமக்களுக்கும் அல்லவா நீச்சல் பயிற்சி கொடுக்கவேண்டிவரும் இது சாத்தியப்படுகின்ற விடயமா?
வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட உழவு இயந்திரத்தில் சென்ற பொதுமகன்கள் இருவருக்கும் நீச்சல் தெரியவில்லையே அவர்களைபற்றி நாம் ஏன் கவலைகொள்ள வில்லை?
மதரசா மாணவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதற்காக மதரசா நிர்வாகம் காரணம் என்று கூறி இருவரை கைது செய்யலாம் என்றால்?
அந்த உழவு இயந்திரத்தில் பயணம் செய்த மாணவர்கள் அல்லாத வேறு இரு நபர்களை வெளியே அனுப்பிவைத்தை அவர்களது தகப்பனையும் தாயையும் கைது செய்யாதது ஏன்? என்ற கேள்விக்கு யார் பதிலளிப்பது?
இப்ராஹீம்
கல்முனை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :