மாவடிப்பள்ளி பிறீடம் பாலர் பாடசாலைகள் வருடாந்த விடுகை விழா



முஹம்மத் மர்ஷாத்-
மாவடிப்பள்ளி பிறீடம் பாலர் பாடசாலையின் மாணவர்களின் வருடாந்த கலை நிகழ்ச்சியும், பரிசளிப்பும் நிகழ்வும் பிறீடம் பாலர் பாடசாலையின் அதிபர் சட்.எம்.நஸ்ஹான் தலைமையில் மாவடிப்பள்ளி கமு/கமு/அல்-அஸ்ரப் மகா வித்தியாலய கேட்போர் கூட்டத்தில் 2024.12.21ஆம் திகதி நடைபெற்றது.

பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவின் செயளாலர் எஸ்.இம்தியாஸ். கலந்து சிறப்பித்ததோடு. இந் நிகழ்வில் கௌரவ அதிதிகளாக எம்.எச்.எம்.சறூக் -பல் அறுவை சிகிச்சை நிபுணர் -அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை கல்முனை மற்றும் கமு/கமு/அல்- அஷ்ரப் மகா வித்தியாலய அதிபர் ஏ.எல்.ரஜாப்தீன், ஜ.எல்.எம். அனிஸ்-வெளிக்கள உத்தியோகத்தர், ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஜ.எம்.சைபூதின்
ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் சிறப்பதிதிகளாக : எம்.ஜ.றியாழ் உதவி இணைப்பாளர் HDO - காரைதீவு , ஏ. அலியார் கிராம சேவகர் - மாவடிப்பள்ளி - மேற்கு , ஏ.ஜெஸ்மீர் -ECDO-பிரதேச செயலகம், காரைதீவு.

இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக எச்.ஹினாயா -பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ,எம்.எஸ்.எம்.ஹக்கீம்- தலைவர் -பிறீடம் விளையாட்டு கழகம், எஸ்.நவாஸ் -பிறீடம் விளையாட்டு கழக ஆலோசகர் பிறீடம் பாலர் பாடசாலை. எஸ்.எம்.ஹக்கீம் ,பிறீடம் பாலர் பாடசாலையின் கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் உட்பட மாணவர்களின் தாய், தந்தையர் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறுவர் தலைமைத்துவம், மூத்தவர்களுக்கு மதிப்பளித்தல், பெற்றோர்கள் கட்டளைகளுக்கு ஏற்ப சிறுவர்கள் செயல்படுதல், கிரகித்தல் , மற்றும் மாதிரி தலைமைத்துவ தலைவர்கள் உருவாக்குதல்,நல்லொழுக்கம் உள்ள பிள்ளைகளாக சமூகத்தில் உருவாக்குதல் போன்ற பல்வேறு விடயங்கள் அதிதிகளால் பேசபட்டதோடு. தொடர்ந்து மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசில்கள், நினைவு சின்னங்கள் வழங்கி பாராட்டப்பட்டனர்.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :