மத்தியமுகாமில் வெளிநோயாளர் பிரிவு திறப்பும் தளபாடங்கள் வழங்கி வைப்பும்



நூருல் ஹுதா உமர்-
த்தியமுகாம் பிரதேச வைத்தியசாலையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட வெளிநோயாளர் பிரிவு இன்று (07) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஷகீலா இஸ்ஸதீன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டதுடன் வைத்தியசாலைக்கு தேவையான தளபாடங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

வைத்தியசாலையின் பிரதேச வைத்திய அதிகாரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர் அவர்களும் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். சாபி அவர்களும் விசேட அதிதிகளாக பங்குபற்றியதுடன் விசேட உரைகளையும் நிகழ்த்தினர்.

இதன்போது பற்சிகிச்சை பிரிவின் வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துவது தொடர்பில் வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்க குழுவினருடன் விரிவாக ஆராயப்பட்டதுடன் வைத்தியசாலையின் ஏனைய தேவைகள் மற்றும் நோயாளிகளுக்கான சேவையை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பிலும் இந்நிகழ்வின் போது கலந்துரையாடப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :